லலித் மோடி குற்றச்சாட்டு: ஆதாரங்களை வெளியிட கோருகிறார் ப.சிதம்பரம்

By பிடிஐ

லலித் மோடி விவகாரத்தில், காங்கிரஸ் ஆட்சியின்போது பிரிட்டிஷ் அரசு அதிகாரிகளுக்கு இந்திய தரப்பில் எழுதப்பட்ட கடிதங்கள் வெளியானால், அவர் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு விடை கிடைக்கும் என ப.சிதம்பரம் கூறியிருக்கிறார்.

'இந்திய டுடே' தொலைக்காட்சி சேனலுக்கு லலித் மோடி அளித்த பேட்டியில், "எனது பாஸ்போர்ட் தவறாக முடக்கப்பட்டுள்ளது. முந்தைய ஐ.மு. கூட்டணி அரசின் காழ்ப்புணர்ச்சியால் நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன். குறிப்பாக ப.சிதம்பரம் எனக்கு அதிகப்படியான நெருக்கடி அளித்தார். ஐ.பி.எல். சர்ச்சையில் சசி தரூர் பதவி விலகியதால் எனக்கு மேலும் நெருக்கடி அளிக்கப்பட்டது" எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், இது குறித்து ப.சிதம்பரம் தனது ட்விட்டரில், "லலித் மோடி விவகாரத்தில், காங்கிரஸ் ஆட்சியின்போது பிரிட்டிஷ் அரசு அதிகாரிகளுக்கு இந்திய தரப்பில் எழுதப்பட்ட கடிதங்கள் வெளியானால் அவர் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு விடை கிடைக்கும். உடனடியாக அந்தக் கடிதங்களை வெளியிடுக" எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருப்புப் பண பதுக்கல் உள்ளிட்ட பல்வேறு புகார்களில் சிக்கிய லலித் மோடிக்கு விசா விவகாரத்தில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவியதால் அவர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்