பாஜகவில் இன்று இணைகிறார் எஸ்.எம்.கிருஷ்ணா

By செய்திப்பிரிவு

கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணா (84), டெல்லியில் இன்று (புதன்கிழமை) பாஜகவில் இணைகிறார்.

அவர் கடந்த வாரமே பாஜகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எஸ்.எம்.கிருஷ்ணாவின் சகோதரி சுனிதா மறைவால் அவர் பாஜகவில் இணைவது தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று அவர் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா முன்னிலையில் அக்கட்சியில் இணைகிறார்.

பாஜக வியூகம்:

எஸ்.எம்.கிருஷ்ணாவை பாஜகவில் இணைத்ததன் மூலம் கர்நாடகாவில் மீண்டும் கட்சியை வலுப்படுத்த பாஜக வியூகம் வலுத்துள்ளது. மேலும், கர்நாடகா தேர்தல்களில் வெற்றியை நிர்ணயிக்கும் பலம் பொருந்திய ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா என்பதாலும் அவரை கட்சியில் இணைப்பதன் மூலம் கணிசமான வாக்குகளைப் பெறலாம் என்பது பாஜகவின் கணக்கு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

18 secs ago

ஜோதிடம்

4 mins ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்