ரிசர்வ் வங்கி ஆளுநரை இ-மெயிலில் மிரட்டியவர் கைது: மும்பை சைபர் பிரிவு போலீஸார் அதிரடி

By பிடிஐ

ரிசர்வ வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கு கடந்த மாதம் 23-ம் தேதி இ-மெயிலில் ஒரு கடிதம் வந்தது. அதில் ஆளுநர் பதவியில் இருந்து விலகாவிட்டால் அவரை யும், குடும்பத்தினரையும் தாக்கப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.

இது குறித்து மும்பை சைபர் பிரிவு போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப் படையில் சைபர் பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில், நாக்பூரில் இருந்து இ-மெயில் வந்தது தெரிந்தது.

உடனடியாக மும்பையில் இருந்து சைபர் பிரிவு தனிப்படை யினர் நாக்பூர் சென்று, கடந்த வெள்ளிக்கிழமை குற்ற வாளியை கைது செய்தனர். அவரது பெயர் வைபவ் பதல்வார் (37) என தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து நாக்பூர் நீதிமன்றத்தில் பதல்வார் ஆஜர் படுத்தப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். வெளிநாட்டில் பட்ட மேற்படிப்பு முடித்துள்ள பதல்வார் வேலை கிடைக்காமல் திண்டாடி வருவதாகவும், அத னால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே இந்த மிரட்டல் கடிதம் அனுப்பியதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதே சமயம் இந்த விவகாரம் குறித்து ரிசர்வ் வங்கியின் செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவிக்கவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

42 mins ago

வணிகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்