ஜூலை 1-ல் 1,500 கி.மீ. தூரத்துக்கு நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடப்படும்: மத்திய சாலை, போக்குவரத்து அமைச்சர் தகவல்

By பிடிஐ

மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி செய்தி யாளர்களிடம் நேற்று கூறியதாவது:

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற் காக மரக்கன்றுகளை நடுவதும் அவற்றைப் பாதுகாப்பதும் மிகவும் அவசியம். சாலைகள் அமைப்பதற்காக ஏராளமான மரங்களை வெட்ட வேண்டிய உள்ளது. அதேநேரம் முடிந்தவரை மரங்கள் வெட்டப்படுவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப் படும். மரக்கன்றுகள் நடுவது ஊக்குவிக்கப்படும்.

ரூ.5 லட்சம் கோடியில் சாலை கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 1 சதவீதம் (ரூ.5,000 கோடி) மரக் கன்றுகள் நடவும் மரங்களை பாது காக்கவும் ஒதுக்கப்படும். இதன் ஒரு பகுதியாக, வரும் ஜூலை 1-ம் தேதி 1,500 கி.மீ. தூர நெடுஞ் சாலையில் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக வளாகத்தில் தானியங்கி வாகன நிறுத்துமிடம் கட்டப்பட உள்ளது. இதனால் இங்குள்ள 4 மரங்களை வேருடன் எடுத்துச் சென்று நெடுஞ் சாலையோரம் நடப்படும்.

மரக்கன்றுகளை நட்டு பரா மரிக்க தன்னார்வத் தொண்டு நிறு வனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், அறக்கட்டளைகள், கூட்டுறவு அமைப்புகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகியவை முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

உலகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்