நவம்பர் 5-ல் தெலங்கானா பட்ஜெட் கூட்டம்

By செய்திப்பிரிவு

புதிதாக உருவான தெலங்கானா மாநிலத்தின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் நவம்பர் 5-ம் தேதி தொடங்குகிறது.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தெலங்கானா பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரிக்க ஒப்புதல் அளித்தது.

இதன்படி கடந்த ஜூன் 2-ம் தேதி தெலங்கானா மாநிலம் உருவானது. அங்கு தற்போது தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், முதல்வர் கே. சந்திரசேகர ராவ் தலைமையில் அமைச்சரவை கூட்டம் ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் முதல் பட்ஜெட் கூட்டத் தொடரை வரும் 5-ம் தேதி கூட்டுவது என முடிவு எடுக்கப்பட்டது. இதில் மாநில நிதி அமைச்சர் ஈடல ராஜேந்தர் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மறுநாள் 6-ம் தேதி சட்டப்பேரவைக்கு விடுமுறை. இந்த கூட்டத் தொடர் நவம்பர் 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

மேலும்