பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் திக்விஜய் அறிவுரை தேவையில்லை: பாஜக

By செய்திப்பிரிவு

பிரதமர் வேட்பாளர் தொடர்பாக பாஜகவுக்கு திக்விஜய் சிங்கின் அறிவுரை தேவையில்லை என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

பாஜகவுக்கு நரேந்திர மோடியைவிட, அக்கட்சியின் மக்களவை எதிர்கட்சி தலைவரான சுஷ்மா சுவராஜ் மிகச் சிறந்த பிரதமர் வேட்பாளராக இருப்பார் என்று என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய்சிங் கருத்து தெரிவித்திருந்தார்.

திக்விஜய் சிங்கின் இந்தக் கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக, பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறும்போது, "எங்களுக்கு திக்விஜய் சிங்கின் அறிவுரை தேவையில்லை. முடிந்தால், காங்கிரஸ் அவர்களது பிரதமர் வேட்பாளரை யார் என்பது குறித்த அறிவிப்பை தேர்தலுக்கு முன்னர் அறிவிக்கட்டும்" என்றார்

இதனிடையே, திக்விஜய் சிங்கின் கருத்து பற்றி சுஷ்மா ஸ்வராஜ் குறிப்பிடுகையில், "காங்கிரஸ் கட்சியின் அறிவிக்கப்படாத பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தியைவிட, திக்விஜய் சிங் பிரதமர் வேட்பாளருக்குத் தகுதியானவர் என்று நான் கருதுகிறேன்" என்று பதிலடி கொடுத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

இந்தியா

40 mins ago

இந்தியா

37 mins ago

இந்தியா

49 mins ago

இந்தியா

54 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்