காங்கிரஸ் அதிர்ச்சி: அருணாச்சல் முதல்வர், 43 எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு கட்சித் தாவல்

By பிடிஐ

காங்கிரஸ் கட்சிக்கு பேரதிர்ச்சி அளிக்கும் வகையில் 43 ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அருணாச்சல முதல்வர் பெமா காண்டு அக்கட்சியில் இருந்து விலகினார்.

காங்கிரஸில் இருந்து விலகிய அனைவரும் அருணாச்சல அரசியல் கட்சி என்ற மாநிலத்தின் மற்றொரு கட்சியில் இணைந்துள்ளனர்.

தற்போது அருணாச்சல காங்கிரஸ் கட்சியில் இருப்பது நபம் துகி மட்டுமே. கடந்த ஜூலை மாதம் அருணாச்சல அரசியலில் ஏற்பட்ட குழப்பதின் காரணமாக நபம் துகி பதவி விலகினார். அவருக்கு பதிலாக பெமா காண்டு முதல்வரானார்.

பாஜகவுடன் கூட்டணி:

புது அரசியல் கட்சி அருணாச்சல மக்கள் கட்சி பாஜகவுடன் கூட்டணி ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. பாஜகவின் சட்டப்பேரவை பலம் 11. 60 உறுப்பினர்கள் கொண்ட அருணாச்சல சட்டப்பேரவையில் 2 சுயேச்சைகளும் உள்ளனர்.

கடந்த ஜனவரியில் அருணாச்சலில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்ததில் இருந்து அங்கு தொடர்ந்து சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக மறுப்பு:

அருணாச்சலில் ஏற்பட்டுள்ள அரசியல் அதிரடி நிகழ்வுக்கு பின்னணியில் பாஜக இருப்பதாக பல்வேறு கட்சியினரும் கூறிவரும் நிலையில் இக்குற்றச்சாட்டை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ திட்டவட்டமாக மறுத்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்குள் நிலவிய உட்பூசல் இந்த நிலைமைக்கு காரணம் என்றார்.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மீது அருணாச்சல காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருந்தனர். காங்கிரஸ் தலைவரை பார்க்க வேண்டும் என்றால் அவர்கள் மூன்று நாள் வரை காத்திருக்கும் நிலை இருக்கிறது. இத்தகைய அதிருப்திகளே அவர்களை இந்நிலைக்கு தள்ளியுள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

37 mins ago

உலகம்

58 mins ago

வாழ்வியல்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

மேலும்