முலாயம், மாயாவதி உட்பட உ.பி. முன்னாள் முதல்வர்கள் அரசு வீட்டை காலி செய்ய உத்தரவு

By செய்திப்பிரிவு

முலாயம் சிங் யாதவ், மாயாவதி உட்பட உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர்கள் 6 பேர் லக்னோ நகரில் தங்கள் அரசு வீடுகளை காலி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

உ.பி. தலைநகரான லக்னோ வில் போஷ் மால் ரோடு, விக்ரமாதித்ய மார்க் ஆகிய இடங் களில் அம்மாநில முன்னாள் முதல்வர்களான கல்யாண் சிங், ராஜ்நாத் சிங், முலாயம் சிங், மாயாவதி, என்.டி. திவாரி, ராம் நரேஷ் யாதவ் ஆகியோருக்கு அரசு பங்களாக்கள் ஒதுக்கப் பட்டுள்ளன.

இந்நிலையில் இதற்கு எதிராக ‘லோக் பகாரி’ என்ற தன்னார்வ அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த அமைப்பு தனது மனுவில், “அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை மீறி, முன்னாள் முதல்வர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யும் விதிமுறைகளை உ.பி. அரசு வகுத்துள்ளது. கடந்த 1997-ல் வகுக்கப்பட்ட இந்த விதிகள் சட்டவிரோதமானவை மற்றும் அரசியல் சாசனத்துக்கு எதிரானவை. இவர்களை உத் தரப்பிரதேச பொது குடியிருப் புகள் சட்டத்தின் கீழ் சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களாகவே கருத வேண்டும்” என்று கூறியிருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அனில் ஆர். தவே தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “முன்னாள் முதல்வர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அரசு வீட்டில் வசிப்பதற்கு உரிமை இல்லை. எனவே உ.பி. முன்னாள் முதல்வர்கள் இன்னும் 2-3 மாதங்களில் தங்கள் அரசு வீடுகளை காலி செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்