விதர்பாவில் 6 விவசாயிகள் தற்கொலை: அரசின் அலட்சிய போக்கு பற்றி சமூக ஆர்வலர் சாடல்

By ஐஏஎன்எஸ்

மகாராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதியைச் சேர்ந்த 6 விவசாயிகள் புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அரசின் அக்கறையின்மையே இதற்குக் காரணம் என சமூக ஆர்வலர் ஒருவர் குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து விதர்பா ஜன் அந்தோலன் சமிதி தலைவர் கிஷோர் திவாரி கூறியதாவது:

யவத்மால் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர், அகோலா, அமராவதி மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவர் என 6 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

கடன் சுமை, பருத்தி, சோயா பீன்ஸ் ஆகியவற்றுக்கு உரிய விலை கிடைக்காதது, பயிர் காப்பீடு கிடைக்காதது என பல்வேறு பிரச்சினைகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என பாஜக உறுதி அளித்தது. இதையடுத்து, பாஜக கூட்டணிக்கு அவர்கள் அமோக ஆதரவு அளித்தனர்.

ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகும் விவசாயிகள் மீதான அலட்சியப் போக்கு தொடர்கிறது. அத்துடன் பருவ மழையும் போதிய அளவுக்கு பெய்யவில்லை. இதனால் விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். எனவே, பிரதமர் நரேந்திர மோடி விதர்பா பகுதியை நேரில் பார்வையிட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் மட்டும் மகாராஷ்டிராவில் 3,146 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தேசிய குற்றப் பதிவு அமைப்பின் புள்ளிவிவரம் கூறுகிறது. இது வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாகும்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

43 mins ago

ஜோதிடம்

46 mins ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்