உ.பி.யில் முக்கியத்துவம் பெற்ற முதல் 2 கட்ட தேர்தல்: பதற்றமான தொகுதிகள் பாஜகவுக்கு சாதகம்?

By ஆர்.ஷபிமுன்னா

உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் பதற்றமான தொகுதிகள் பாரதிய ஜனதாவின் வெற்றிக்கு சாதகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 4 முதல் மார்ச் 8 வரை நடை பெற உள்ளது. இதில் 403 தொகுதிகளை கொண்ட உ.பி.யில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. உ.பி.யில் முதல்கட்ட தேர்தல் பிப்ரவரி 11-ம் தேதியும் இரண்டாம் கட்ட தேர்தல் பிப்ரவரி 15-ம் தேதியும் நடைபெறுகிறது. முதல் 2 கட்டங்களில் 73 மற்றும் 67 தொகுதிகள் தேர்தலை சந்திக்கின்றன.

இவற்றில், முசாபர்நகர், ஷாம்லி, மீரட், அலிகர், ஆக்ரா, சம்பல், முராதாபாத், சஹரான்பூர், ராம்பூர் ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்றுள்ள தொகுதிகள் அடிக்கடி மதக்கலவரம் நடைபெறும் இடங்களாகும். இத்தொகுதிகள் உட்பட மேற்கு உ.பி.யின் 140 தொகுதிகளில் முஸ்லிம் வாக்காளர் களும் அதிகம் உள்ளனர். எனினும் கடந்த 2014 மக்களவை தேர்தலில் இங்கு பாஜக வெற்றி பெற்றது. இதற்கு அப்போதைய மோடி அலையும் முசாபர்நகரில் முந்தைய ஆண்டில் ஏற்பட்ட மதக்கலவரமுமே காரணமாகக் கூறப்படுகிறது.

கடந்த மக்களவை தேர்தலில், உ.பி.யின் 80 தொகுதிகளில் 71-ல் பாஜக வெற்றி பெற்றது. ஆனால் சட்டப்பேரவை தேர்தலில் இது சாத்தியம் இல்லாத சூழல் உள்ளது. முதல்கட்ட தேர்தலை சந்திக்கும் 73 தொகுதிகளில், ஆளும் சமாஜ்வாதி 24, எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜ் 24, பாஜக 11, ராஷ்ட்ரிய லோக் தளம் 9, காங்கிரஸ் 5 தொகுதிகள் என கடந்த தேர்தலில் வெற்றி பெற்றன. இதில் தெய்வீக நகரமான மதுராவின் 5 தொகுதிகளில் ஒன்றுகூட பாஜகவுக்கு கிடைக்கவில்லை. எனவே இவற்றின் பதற்றமான பகுதிகளில் பாஜக தனது இந்துத்துவா பிரச்சாரத்தை முன்வைக்கத் தொடங்கிவிட்டது.

பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியலில் மதக்கலவர வழக்கில் சிக்கிய பலரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். முசாபர் நகர் பகுதி எம்எல்ஏக்களான சுரேஷ் ராணா, சங்கீத் சோம் ஆகியோ ருக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இவர்கள் இருவ ரும் 2013-ல் நடைபெற்ற மதக்கல வர வழக்கில் சிக்கியவர்கள். இதில் சங்கீத் சோம், சர்தனா தொகுதியின் கேடா கிராமத்தில் தனது பிரச்சாரத்தை நேற்று தொடங்கினார். அப்போது, தனது வாகனத்தின் முன்பு பெரிய எல்இடி தொலைக்காட்சி அமைத்து முசாபர்நகர் கலவரப் பதிவுகளை அவர் காட்டியுள்ளார். இதுகுறித்து மீரட் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு எதிரான நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இது குறித்து மீரட் மாவட்ட ஆட்சி யர் பி.சந்திரலேகா, ‘தி இந்து’விடம் கூறும்போது, “நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட கலவரக் காட்சிகளை அவர் காட்டியதாக புகார் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு கேட்டுள்ளேன். அறிக்கை சமர்ப்பிக் கப்பட்ட பின் தேர்தல் ஆணையத் துக்கு தகவல் தெரிவித்து, சம்பந்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

கல்யாண்சிங் தலைமையிலான பாஜக ஆட்சியில்தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதனால் முஸ்லிம் களின் எதிர்ப்பை அவர் பெற்றார். இந்நிலையில் அவரது சிபாரிசின் பேரில் அவரது பேரன் மற்றும் ஆதரவாளர்கள் 8 பேர் பாஜகவின் வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். பிஜ்னோர் கலவரத் தில் சிறுபான்மையினர் 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் ஐஸ்வர்யா சவுத்ரி என்ற ஆர்எஸ்எஸ் பிரமுகர் சிறையில் உள்ளார். இவரது மனைவி சுசி மாசூம் சவுத்ரிக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்