ஆசிட் வீச்சில் பெண் பலியான வழக்கில் ஒருவர் குற்றவாளி: மும்பை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

By ஐஏஎன்எஸ்

மும்பையில் ஆசிட் வீச்சில் இளம்பெண் பலியான வழக்கில் ஆங்குர் நாராயண்லால் பன்வார் குற்றவாளி என மகளிர் சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.

டெல்லியைச் சேர்ந்த பிரீத்தி ரதி (23) கடந்த 2013-ம் ஆண்டு மே 2-ம் தேதி கரிப் ரத் விரைவு ரயிலில் மும்பை சென்றார். பாந்த்ரா ரயில் நிலையத்தில் இறங்கிய ரதி மீது பன்வார் ஆசிட் ஊற்றினார். இதில் படுகாயமடைந்த ரதி, சிகிச்சை பலனின்றி அதே ஆண்டு ஜூன் 1-ம் தேதி உயிரிழந்தார்.

இது தொடர்பாக மும்பை மக ளிர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. விசாரணை முடிந்த நிலையில், சிறப்பு நீதிபதி ஏ.எஸ்.ஷிண்டே, பன்வார் குற்றவாளி என்று நேற்று தீர்ப்பு வழங்கினார். தண்டனை பற்றிய வாதம் இன்று நடைபெறுகிறது.

இதுகுறித்து அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் உஜ்வல் நிகாம் கூறும்போது, “குற்றம்சாட்டப்பட்ட பன்வார், ரதியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதை ரதி மறுத்துள்ளார். இந்நிலையில் நர்ஸ் வேலைக்காக ரதி மும்பை வந்தார். அதே ரயிலில் வந்த பன்வார், ரயிலிலிருந்து இறங்கியபோது அவர் மீது ஆசிட் ஊற்றி உள்ளார்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஓடிடி களம்

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்