செல்போன் சந்தாதாரர்களை சரிபார்க்க என்ன செய்தீர்கள்?- அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி

By பிடிஐ

செல்போன் சந்தாதாரர்களை சரிபார்க்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

செல்போன் சந்தாதாரர்களை சரிபார்க்கும் வழக்கம் இல்லாததால் நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மத்திய தொலைத்தொடர்புத் துறை, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆகிய வற்றுக்கு லோக்னித் அறக்கட்டளை 2014-ல் கடிதம் எழுதியிருந்தது.

இதன்மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் லோக்னித் அறக்கட்டளை, உச்ச நீதிமன்றத்தை நாடியது. இந்த அமைப்பு தனது மனுவில், “100 சதவீத செல்போன் சந்தாதாரர்களின் அடையாளம் மற்றும் முகவரி சரிபார்க்கப்பட வேண்டும்.

நாட்டில் 5.25 கோடி சந்தாதாரர் கள் உள்ளனர். இதில் 5 சதவீத சந்தாதாரர்கள் மட்டுமே சரிபார்க்கப் பட்டுள்ளனர். பயங்கரவாத செயல் களில் ஈடுபடுவோர் போலி சான்று கள் மூலம் செல்போன் இணைப்பு பெறுகின்றனர். இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட் டுள்ளது” என்று கூறியிருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, “லோக்னித் அறக்கட் டளையின் பரிந்துரைகள் குறித்து மத்திய தொலைத்தொடர்புத் துறை, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆகி யவை 6 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்” என்று நீதிபதி கள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 mins ago

தொழில்நுட்பம்

48 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்