தேசிய கட்சி அந்தஸ்தை இழக்கிறது பகுஜன் சமாஜ்: 2 மாநில தேர்தல் படுதோல்வி எதிரொலி

By செய்திப்பிரிவு

மகாராஷ்டிரா, ஹரியாணா சட்டசபை தேர்தலில் குறிப்பிடத் தக்க வெற்றி பெறாததால் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி), தேசிய கட்சி அந்தஸ்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் இது குறித்து இனிமேல்தான் முடிவு எடுக்கும்.

ஹரியாணாவில் 90 தொகுதி களிலும் பிஎஸ்பி போட்டியிட்டது. இதில் பிரித்லா தொகுதியில் போட்டியிட்ட பிஎஸ்பி வேட்பாளர் டெக் சந்த் சர்மா மட்டுமே வெற்றி பெற்றார். இவர் பாஜக வேட்பாளர் நைன்பால் ராவத்தை 1,179 வாக்கு கள் வித்தியாசத்தில் தோற்கடித் தார். இங்கு ஒட்டுமொத்தமாக 4.4 சதவீத வாக்குகள் இக்கட்சிக்கு கிடைத்தது.

மகாராஷ்டிராவில் 288-ல் 260 தொகுதிகளில் போட்டியிட்ட பிஎஸ்பி ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. இங்கு இக்கட்சிக்கு வெறும் 2.2 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தது.

கடந்த மக்களவைத் தேர்தலில் பிஎஸ்பி ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. இதையடுத்து, தேசிய அந்தஸ்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என விளக்கம் அளிக்குமாறு பிஎஸ்பிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மகாராஷ்டிரா, ஹரியாணா சட்டசபை தேர்தல் வர உள்ளதால் கால அவகாசம் வழங்குமாறு அக்கட்சி கோரியிருந்தது.

இந்நிலையில், தேசிய கட்சி அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால் சமீபத் தில் நடைபெற்ற சட்டசபை தேர்த லில் அக்கட்சி 2 தொகுதிகளில் வெற்ற பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்