முதல்வர் வசுந்தராவுக்கு பாஜக ஆதரவு: ராஜினாமா செய்ய தேவையில்லை என அறிவிப்பு

By செய்திப்பிரிவு

ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவிய விவகாரத்தில் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் ராஜினாமா செய்ய அவசியமில்லை என்று பாஜக தெரிவித்துள்ளது.

இதுவரை மவுனம் சாதித்து வந்த அந்தக் கட்சி இப்போது தனது நிலையை தெளிவுபடுத்தியுள்ளது. ஊழல் புகாரில் சிக்கியுள்ள லலித் மோடி தற்போது பிரிட்டன் தலை நகர் லண்டனில் வசித்து வருகிறார். அவரது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போர்ச்சுக்கல் நாட்டில் சிகிச்சை பெற்றார். அப்போது லண்டனில் இருந்து போர்ச்சுகல் செல்வதற்கு பயண ஆவணங்கள் கிடைக்க சுஷ்மா ஸ்வராஜ் உதவியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இதேபோல லலித் மோடி பிரிட்டன் குடியேற்ற விண்ணப்பத் துக்கு வசுந்தரா ராஜே பரிந்துரை செய்தார் என அண்மையில் தகவல் வெளியானது. இதனால் அவரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சுஷ்மாவும் வசுந்தராவும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

இப்பிரச்சினை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் நேற்று முன்தினம் டெல்லியில் ஆலோசனை நடத்தினர். மேலும் ஆர்எஸ்எஸ்தலைவர்களிடமும் ஷா தொடர்பில் இருப்பதாக தெரிகிறது.

சுஷ்மா ஸ்வராஜுக்கு முழு ஆதரவு வெளிப்படையாக தெரி வித்த பாஜக உயர்தலைவர்கள், வசுந்தரா விஷயத்தில் எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் முதல்வர் வசுந்தரா ராஜே நேற்று பஞ்சாப் மாநிலம் அனந்த்பூர் சாஹிப் செல்வ தாக இருந்தது. அங்கு பாஜக தலைவர் அமித் ஷாவையும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்துப் பேச அவர் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் திடீரென அவர் பஞ்சாப் பயணத்தை ரத்து செய்தார். அவரது அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்த நிலையில் வசுந்தராவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை பாஜக தலைமை எடுத்துள்ளது.

இதுகுறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி கூறியதாவது:

வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மாவும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தராவும் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை.

லலித் மோடி விவகாரத்தில் இருவரும் சட்ட ரீதியில் எந்த முறைகேட்டிலும் இறங்கவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை என்பது கற்பனையானது.

சுஷ்மா விஷயத்தில் கட்சி தனது நிலைப்பாட்டை தெளிவு படுத்தி உள்ளது. வசுந்தரா விவகாரத் தில் அவருக்கு எதிராக உள்ள ஆவணங்கள் உறுதிசெய்யப்பட வில்லை. ஆதாரமில்லாத குற்றச் சாட்டுகளை எதிர்க்கட்சிகள் சுமத்து கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சுஷ்மாவும் வசுந்தராவும் ராஜினாமா செய்யா விட்டால் நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடரை முடக்கு வோம் என்று காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

தமிழகம்

28 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

47 mins ago

இந்தியா

3 hours ago

வாழ்வியல்

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

மேலும்