நரேந்திர மோடியும் இந்தியாவை வழிநடத்தும் திறனும்!

By செய்திப்பிரிவு

'மக்களிடையே வெறுப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வந்தால், நரேந்திர மோடியால் இந்தியாவை சிறப்பாக வழிநடத்த முடியாது.'

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் நேற்றைய (சனிக்கிழமை) தலையங்கத்தில் முக்கிய அம்சம் இதுதான்.

நரேந்திர மோடி குறித்து வெளியான அந்தத் தலையங்கத்தின் சில துளிகள் இதோ...

* மோடி எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது தொடர்பான தனது திறைமையை வெளிப்படுத்தவில்லை. மாற்றுக் கருத்துகளை சகித்துக் கொள்பவராகத் தன்னை அவர் காட்டிக் கொள்ளவில்லை. மோடியை ஏற்றுக் கொள்ளாததால் 17 ஆண்டுகளாக கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதா தளம் போன்ற கட்சிகள் விலகிச் சென்றுவிட்டன.

* 2002-ம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த கலவரத்தில் ஆயிரம் பேர் உயிரிழந்தனர். மக்களிடையே அச்சத்தையும், வெறுப்பையும் மோடி ஏற்படுத்தி வந்தால், இந்தியாவை சிறப்பாக வழிநடத்த அவரால் முடியாது.

* குஜராத் மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக கூறப்படும் சாதனைகளை முழுவதுமாக ஏற்க முடியாது. நாட்டிலேயே குஜராத்தில்தான் வறுமைக் கோட்டுக்கு கீழ வாழ்வோர் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. ஆனால், மற்ற பகுதிகளில் வாழும் முஸ்லிம்களுடன் ஒப்பிடும்போது, குஜராத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கின்றனர்.

* அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பான நரேந்திர மோடியின் எழுச்சி, இந்தியர்கள் பலருக்கு ஏற்புடையதாக இல்லை. குறிப்பாக 14 கோடி முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மையினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுவே அந்தத் தலையங்கத்தின் முக்கிய அம்சங்கள்.

சரி, நீங்கள் இந்தத் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கோணங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

விவாதிக்கலாம் வாங்க.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

53 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்