உ.பி.யில் மனிதாபிமானமற்ற நடவடிக்கையில் ஈடுபட கூடாது: அதிரடிப்படைக்கு அரசு உத்தரவு

By பிடிஐ

பெண்களுக்கு எதிரான குற்றச் செயலில் ஈடுபடுவோர் மீது மனிதாபிமானமற்ற நட வடிக்கையில் ஈடுபடக்கூடாது என அதிரடிப்படை போலீஸாருக்கு உத்தரபிரதேச அரசு உத்தர விட்டுள்ளது.

உ.பி. முதல்வராக பொறுப் பேற்ற யோகி ஆதித்யநாத், பாஜகவின் தேர்தல் வாக்குறுதியை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில், பெண்களுக்கு எதிராக நடை பெறும் குற்றங்களைத் தடுக்க, காவல் துறையில் சிறப்பு அதிரடிப்படை (ரோமியோ ஸ்கோட்) அமைக்கப்பட்டது.

இந்த அதிரடிப்படையினர் சட்டத்தை மீறி செயல்படு வதாக அலகாபாத் உயர் நீதி மன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், அதிரப்படையினர் சட்டப்படி மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

இதையடுத்து, பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாகக் கூறிக்கொண்டு, குற்றம் புரிவோர் மீது மனிதாபிமானமற்ற நடவடிக்கையில் அதிரடிப் படையினர் ஈடுபடக் கூடாது என மாநில அரசு நேற்று உத்தரவிட்டது.

குறிப்பாக, குற்றச் செயலில் ஈடுபடுவோருக்கு மொட்டை அடிப்பது, முகத்தில் கரி பூசுவது, தோப்புக் கரணம் போடச் சொல்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் போலீஸார் ஈடுபடக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்