திருமலையில் இருந்து விஜயவாடாவுக்கு புஷ்கர ரதம் புறப்பட்டது

By செய்திப்பிரிவு

கிருஷ்ணா புஷ்கர புனித நீராடும் விழா வரும் 12-ம் தேதி தொடங்க உள்ளதையொட்டி, திருமலையில் இருந்து ஏழுமலையான் சார்பில் பட்டு வஸ்திரங்கள், சீர்வரிசையுடன் ரதம் புறப்பட்டுச் சென்றது.

கோதாவரி புஷ்கரத்தை தொடர்ந்து, வரும் 12-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை கிருஷ்ணா புஷ்கரம் வெகு விமரிசையாக நடத்த ஆந்திரா, தெலங்கானா மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. இதை யொட்டி திருமலை, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் விஜயவாடா வில் ஏழுமலையான் மாதிரி கோயில் கட்டப்பட்டு வருகிறது. இங்கு தின மும் சுமார் ஒரு லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யவும், தரிசன ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கிருஷ்ணா புஷ்கரத்துக்காக ஏழுமலையான் சார்பில், உற்சவ மூர்த்திகளான மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி மற்றும்பட்டு வஸ்திரங்கள், சீர்வரிசை ஒரு பஸ்ஸில் (ரதம்) அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ரதத்தை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சதலவாடா கிருஷ்ண மூர்த்தி, தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த ரதம் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் சென்றடைந்தது. அங்கு பத்மாவதி தாயாரின் ஆசி பெற்று, அங்கிருந்து கடப்பாவில் உள்ள ஒண்டிமிட்டா ஸ்ரீராமர் கோயில், மஹா நந்தி, ஸ்ரீசைலம், அமராவதி வழியாக விஜயவாடா செல்கிறது. அங்கு வரும் 7-ம் தேதி ஏழுமலையானின் மாதிரி கோயில் திறக்கப்பட உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

17 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்