அனைத்துப் பள்ளிகளிலும் பகவத்கீதையை கட்டாயமாக்க வேண்டும்: பாஜக எம்.பி. தனிநபர் மசோதா தாக்கல்

By செய்திப்பிரிவு

அனைத்துப் பள்ளிகளிலும் பகவத்கீதையை கட்டாயமாக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. ரமேஷ் பிதுரி தனிநபர் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

பாஜக எம்.பி. ரமேஷ் பிதுரி தாக்கல் செய்துள்ள மசோதாவில், ''கீதையில் உள்ள தத்துவங்கள் இன்றைய தலைமுறைக்கு அவசியமானது என்பதால் அனைத்துப் பள்ளிகளிலும் பகவத்கீதையை கட்டாயமாக்க வேண்டும். பகவத்கீதையின் சாராம்சம் கொண்ட பாடங்களை நீதி போதனை வகுப்புகளில் கற்பிக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும். இதை நடைமுறைப்படுத்த தவறும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் அதை நிறைவேற்ற மத்திய அரசு ரூ.5000 கோடி ஒதுக்க வேண்டும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மீதான விவாதம் வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 mins ago

சினிமா

11 mins ago

தமிழகம்

32 mins ago

இந்தியா

17 mins ago

சினிமா

41 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்