கோவாவுக்கு புதிய முதல்வர்? - சிகிச்சைக்காக டெல்லி செல்கிறார் மனோகர் பாரிக்கர்

By செய்திப்பிரிவு

 கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேல் சிகிச்சைக்காக அவர் இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளார். பாரிக்கருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதால், அவருக்கு பதிலாக அம்மாநிலத்துக்கு புதிய முதல்வரை தேர்வு செய்ய பாஜக தலைமை திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு கடந்த பிப்ரவரி மாதம் கணைய அழற்சி காரணமாக சில மாதங்களுக்கு முன், மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் கடந்த மார்ச்சிலிருந்து ஜூன் வரை அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பினார். சில நாட்கள் அரசு பணிகளை கவனித்து வந்தநிலையில் மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.

கோவா திரும்பிய நிலையில் அவருக்கு பூரண குணம் ஏற்படவில்லை. அவரது உடல்நிலை நேற்று பாதிக்கப்பட்டதையடுத்து வடக்கு கோவா மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மனோகர் பாரிக்கர் இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுகிறார். உடல்நலம் கருதியும் தற்போதைய நிலையில் நிர்வாக பொறுப்புகளை கவனிக்க முடியாத நிலையில் இருப்பதால் வேறு ஒருவரிடம் முதலமைச்சர் பொறுப்புகளை ஒப்படைக்க அவர் விரும்புவதாக கூறப்படுகிறது.

இதனால் பாரிக்கருக்கு பதிலாக புதிய முதல்வரை தேர்வு செய்ய பா.ஜ.க மேலிடம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. புதிய முதல்வர் தேர்வு தொடர்பாக பாஜக உயர்மட்ட தலைவர்கள், நாளை மறுதினம், கோவா செல்ல உள்ளனர். எனவே கோவாவுக்கு விரைவில் புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது.

கோவா மாநில நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரான்சிஸ் டி'சோசாவும் உடல்நலம் குன்றி சிகிச்சைக்காக கடந்தமாதம் அமெரிக்கா சென்றுள்ளார். மின்துறை அமைச்சர் மட்காக்கரும் மூளை பாதிப்பு நோயால் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனவே அங்கு அரசு நிர்வாகம் முடங்கியுள்ளதால் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என எதிர்கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

41 mins ago

இந்தியா

49 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்