முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு உடல் நலக் குறைவு : கோவாவில் அரசு அமைக்க உரிமை கோருகிறது காங்கிரஸ்

By செய்திப்பிரிவு

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு மாற்று அரசு அமைக்க முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி உரிமை கோரியுள்ளது.

கோவாவில் பாஜக தலைமை யிலான கூட்டணி அரசு அமைந்துள் ளது. முதல்வராக மனோகர் பாரிக் கர் பதவி வகிக்கிறார். இந்நிலையில் கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள பாரிக்கர், கடந்த மார்ச்சில் அமெரிக்கா சென்று 3 மாத சிகிச்சை பெற்றார். தற் போது அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

இந்நிலையில் முதல்வரின் நிர்வாகப் பொறுப்புகள் மூத்த அமைச்சர் ஒருவரிடம் ஒப்படைக்கப் படாததால் கூட்டணிக் கட்சியான மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி (எம்ஜிபி) அதிருப்தி அடைந்துள் ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியும் கடந்த சனிக்கிழமை பாஜகவை விமர்சித்தது.

இந்நிலையில் கோவாவில் மாற்று அரசு அமைக்க காங்கிரஸ் உரிமை கோரியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சந்திரகாந்த் கவலேகர் தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 16 பேரும் நேற்று ஆளுநர் மாளிகைக்குச் சென்று மனு அளித்தனர். கோவாவில் பாஜக தலைமையிலான அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு, மாற்று அரசு அமைக்க காங்கிரஸுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என அவர்கள் மனுவில் கோரியுள்ளனர்.

இதனிடையே ராம்லால் உள் ளிட்ட பாஜக தலைவர்கள் 3 பேர், 2 நாட்களாக கோவாவில் அரசியல் சூழலை ஆய்வு செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

விளையாட்டு

2 mins ago

க்ரைம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

வாழ்வியல்

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

12 hours ago

மேலும்