ரயில்வே உணவக ஒப்பந்த ஊழல் வழக்கு: லாலு பிரசாத் மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவுக்கு ஜாமீன்

By செய்திப்பிரிவு

ஐஆர்சிடிசி எனப்படும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் தொடர்பான ஊழல் வழக்கில் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத்தின் மனைவி ராப்ரி தேவி, அவரது மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு டெல்லி நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங் கியது.

லாலு ரயில்வே அமைச்சராக இருந்தபோது ஐஆர்சிடிசி-க்கு சொந்தமான 2 ஹோட்டல்களை நடத்துவதற்கான ஒப்பந்தம் தனி யார் நிறுவனத்துக்கு அளிக்கப் பட்டது. இதில் முறைகேடு நடந் துள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்து சிபிஐ கடந்த ஆண்டு ஜூலையில் வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து ராஞ்சி, பாட்னா, புவனேஸ்வர் மற்றும் குருகுராமில் 12 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 16-ம் தேதி சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தபோது, லாலு, ராப்ரி, தேஜஸ்வி மற்றும் பிறருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இருப்பதாக கூறியது.

இந்த வழக்கில் லாலு குடும் பத்தினர் மற்றும் பிறரை ஆகஸ்ட் 31-ல் ஆஜராகுமாறு டெல்லி சிபிஐ நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.

இதையொட்டி ராப்ரிதேவி, தேஜஸ்வி உள்ளிட்டோர் நேற்று பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இருவரும் தலா ரூ.1 லட்சம் செலுத்தி ஜாமீன் பெற்றுக்கொள்ள நீதிபதி அருண் பரத்வாஜ் உத்தரவிட்டார்.

மேலும் வழக்கை அக்டோபர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

லாலு, கால்நடைத் தீவன வழக்கில் சிறையில் இருப்பதால் இந்த வழக்கில் நேற்று ஆஜராக வில்லை. அவரை அடுத்த விசாரணையின்போது ஆஜர்படுத் தவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் முன்னாள் மத் திய அமைச்சர் பிரேம் சந்த் குப்தா, அவரது மனைவி சரளா குப்தா, ஐஆர்சிடிசி-யின் முன்னாள் பொது மேலாளர் பி.கே.அகர்வால், முன் னாள் நிர்வாக இயக்குநர் பி.கே. கோயல், முன்னாள் இயக்குநர் ராகேஷ் சக்சேனா, முன்னாள் பொது மேலாளர்கள் வி.கே.அஸ் தானா, ஆர்.கே.கோயல், சுஜாதா ஹோட்டல்ஸ் இயக்குநர்கள் விஜய் கோச்சார், வினய் கோச் சார் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இவர்களில் ஐஆர்சிடிசி முன் னாள் பொது மேலாளர் பி.கே. அகர்வால் தற்போது ரயில்வே வாரிய கூடுதல் உறுப்பினராக உள்ளார். அவரை இந்த வழக் கில் விசாரணைக்கு உட்படுத்த உயரதிகாரிகளின் அனுமதி பெறப் பட்டுள்ளதாக சிபிஐ ஏற்கெனவே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

30 mins ago

வாழ்வியல்

57 mins ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

மேலும்