41 கோடி பான் கார்டுகளில் 21 கோடி கார்டுகள், ஆதாருடன் இணைப்பு

By பிடிஐ

நாட்டில் இதுவரை 41.02 கோடிமக்களுக்கு பான் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன, அதில் 21.08 கார்டுகள் மட்டுமே ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன என்று சமீபத்தில் வெளியான புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.

ஆதார் குறித்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஆதார் சட்டம் செல்லுபடியாகும், தனியார்நிறுவனங்கள் ஆதார் கார்டுகளை மக்களிடம் இருந்து பெறக்கூடாது என்று உத்தரவிட்டது. மேலும், அரசின் சலுகைகளைப் பெற ஆதார் அவசியம், அதேசமயம், அதை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும், பான் கார்டு, ஆதார் கார்டு இணைப்பு கட்டாயம் என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில், வருமான வரித் தாக்கல் செய்பவர்கள் மட்டுமின்றி, பான் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் ஆதார் கார்டுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்கான காலக்கெடுவும் 2019-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்போது வரை பான்கார்டு வைத்திருப்பவர்களில் 50 சதவீதம் பேர் ஆதார் கார்டுடன், பான் கார்டை இணைத்துள்ளனர்.

இதுவரை நாட்டில் மொத்தம் 41.02 கோடி பேருக்கு பான் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 21.08 கோடி பேர் தங்களின் பான்கார்டை, ஆதார் கார்டை இணைத்துள்ளனர். இதில் பான்கார்டு வைத்துள்ள 40.1 கோடி பேரும் தனிமனிதர்கள். மற்றவர்கள் நிறுவனங்கள் பெயரிலும், குழுமத்தின் பெயரிலும், கூட்டுக் குடும்பத்தலைவர் பெயரிலும் பான்கார்டுகள் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

16 mins ago

இந்தியா

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுலா

3 hours ago

மேலும்