வட கிழக்கு இந்தியாவின் நுழைவு வாயிலாக வாரணாசி திகழும்: ரூ.557 கோடி மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைத்து மோடி பேச்சு

By ஐஏஎன்எஸ்

தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியை வட கிழக்கு இந்தியாவின் நுழைவு வாயிலாக மாற்ற அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று (திங்கட்கிழமை) தனது 68-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதையொட்டி, உத்தரப் பிரதேசத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு 2 நாள் பயணமாகச் சென்றார்.

இரண்டாவது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) பனாரஸ் இந்து பல்கலைக்கழக அரங்கத்தில் உரையாற்றினார். அங்கு சுமார் ரூ.557 கோடி மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பேசினார்.

அப்போது ''இந்தத் திட்டங்கள் மூலம் வாரணாசியின் முகம் மாறும். அப்போது வட கிழக்கு இந்தியாவின் நுழைவு வாயிலாக வாரணாசி திகழும். காசியை ஸ்மார்ட் நகரமாக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் கோயில் நகரமான காசியின் பண்டைய கால தொன்மையும், கலாச்சாரமும் மாற்றப்படாது'' என்றார் மோடி.

முன்னதாக, வாரணாசி வந்த மோடியை, முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மாநில பாஜக தலைவர் மகேந்திர நாத் பாண்டே ஆகியோர் வரவேற்றனர். அப்போது பிரதமருக்கு 'பஞ்சமுகி அனுமான்' சிலை பரிசளிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

11 hours ago

ஓடிடி களம்

11 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்