தேச அன்னை பசு: உத்தராகண்ட் சட்ட மன்றம் ஒருமனதாகத் தீர்மானம்

By செய்திப்பிரிவு

பசுவை ‘தேச அன்னை’யாக அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது உத்தராகண்ட் மாநில சட்ட மன்றம். அம்மாநில கால்நடைத் துறை அமைச்சர் ரேகா ஆர்யா கொண்டுவந்த இந்தத் தீர்மானம், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் இதை விமர்சித்திருந்தாலும், தீர்மானம் நிறைவேற்றப்படுவதை எதிர்க்கவில்லை. சுவாசம் மூலம் ஆக்ஸிஜனை உள்ளிழுப்பதுடன், அதை வெளியேற்றவும் செய்யும் ஒரே விலங்கு பசுதான் என்றும் ரேகா ஆர்யா குறிப்பிட்டிருக்கிறார்.  கோமியத்தின் மருத்துவப் பலன்களைப் பட்டியலிட்டிருக்கும் அவர், “கைக்குழந்தைகளுக்குத் தாய்ப்பாலுக்குப் பிறகு சிறந்தது பசும்பால்தான் என்று அறிவியல்பூர்வமாகக் கருதப்படுகிறது. எனவே, பசு என்பது தாய்மையின் சின்னம்” என்று கூறியிருக்கிறார். தேசிய நெடுஞ்சாலைகளில் சுற்றித் திரியும் பசுக்களைப் பராமரிக்கும் வகையில் குடில்களை அமைக்குமாறு அம்மாநில அரசுக்கு நைனிடால் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இன்னமும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 min ago

சினிமா

3 mins ago

உலகம்

17 mins ago

விளையாட்டு

24 mins ago

ஜோதிடம்

6 mins ago

ஜோதிடம்

53 mins ago

தமிழகம்

43 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்