சிவப்பு சிக்னலின்போது வண்டி என்ஜினை அணைத்தால் ரூ.250 கோடியை மிச்சப்படுத்தலாம்

By இவ்ஜ்யோத் சிங் ஓபராய்

சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும்போது வண்டி என்ஜின்களை அணைத்தால் ஆண்டுக்கு ரூ.250 கோடி மிச்சப்படுத்தலாம் என்று டெல்லி பெட்ரோலிய பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் நிர்வாக இயக்குனர் அலோக் திரிபாதி வியாழக்கிழமை அன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ''எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பது, சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவற்றைத் தாண்டி, சிக்னலில் சிவப்பு விளக்கு ஒளிரும் போதான காத்திருப்பில், வண்டி என்ஜின்களை அணைத்துவிடுங்கள். இதன்மூலம் மட்டுமே ஆண்டுக்கு ரூ.250 கோடியை மிச்சப்படுத்தலாம். அதுவும் டெல்லியில் மட்டுமே இவ்வளவு தொகை மிச்சமாகும்'' என்றார்.

மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் டெல்லி போக்குவரத்துத்துறை இணைந்து 2016-17-ல் போக்குவரத்து விழிப்புணர்வுப் பேரணியை நடத்தின. அதன் முடிவுகள் குறித்துப் பேசிய மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் சதிஷ் சந்திரா, ''பேரணியில் டெல்லியின் 100 போக்குவரத்து மிகுந்த சந்திப்புகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும்போது 20 விநாடிகளுக்கு என்ஜின்களை அணைத்து வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. சுமார் 7 நாட்கள் இவ்வாறு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.

இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.250 கோடி மதிப்பிலான எரிபொருள் மிச்சமாகும் என்று கண்டறியப்பட்டது. தற்போது 180 விநாடிகளுக்கான போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால் இந்த ஆய்வின் மூலம் சீரான போக்குவரத்துக்கு அதிகபட்சம் 120 விநாடிகளுக்கான போக்குவரத்து சிக்னல்களே தேவை என்று கண்டறிந்துள்ளோம்'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

இந்தியா

16 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

35 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்