35-ஏ சட்டப் பிரிவை ரத்து செய்ய எதிர்ப்பு; உள்ளாட்சித் தேர்தல் புறக்கணிப்பு: மக்கள் ஜனநாயக கட்சி எச்சரிக்கை

By பிடிஐ

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை பாது காக்க நடவடிக்கை எடுக்கா விட்டால், உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்போம் என தேசிய ஜனநாயகக் கட்சியை அடுத்து, மக்கள் ஜனநாயகக் கட்சியும் (பிடிபி) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 35-ஏ பிரிவு காஷ்மீர் மாநில மக்களுக்கு சிறப்பு உரிமை வழங்குவதுடன் பிற மாநில மக்கள் காஷ்மீரில் அசையா சொத்து வாங்க தடை விதிக்கிறது. இந்தப் பிரிவை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு அம்மாநிலத்தைச் சேர்ந்த கட்சிகள் மற்றும் பல அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்காவிட்டால், இந்த மாத இறுதியில் நடைபெற உள்ள உள்ளாட்சி மற்றும் 2019 மக்களவை தேர்தல்களைப் புறக்கணிக்கப் போவதாக தேசிய மாநாட்டு கட்சி ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், பிடிபி-யின் கூட்டம் ஸ்ரீநகரில் நேற்று நடை பெற்றது. இதில் இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இக்கூட்டத்துக்குப் பின்னர் பிடிபி தலைவரும் முன் னாள் முதல்வருமான மெகபூபா முப்தி செய்தியாளர்களிடம் கூறும் போது, “மாநில மக்கள் நிறைய தியாகம் செய்துள்ளனர். 35-ஏ சட்டப்பிரிவை ரத்து செய்வதை ஒரு வரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த சட்டப் பிரிவை பாதுகாக்க எந்த ஒரு எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறோம்” என்றார்.

பிடிபி செய்தித்தொடர்பாளர் ரபி அகமது மிர் கூறும்போது, “இந்த விவகாரம் தொடர்பாக மக்க ளுக்கு எழுந்துள்ள அச்சத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். இல்லாவிட்டால் வரும் பஞ்சா யத்து மற்றும் நகராட்சி தேர்தலை எங்கள் கட்சி புறக்கணிக்கும். இதனால் தேர்தல் நடத்துவதே வீண் வேலையாக இருக்கும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

விளையாட்டு

8 mins ago

சினிமா

14 mins ago

தமிழகம்

35 mins ago

இந்தியா

20 mins ago

சினிமா

44 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்