தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பதவி உயர்வுக்கு இருந்த தடை நீக்கம்: உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு

By செய்திப்பிரிவு

அரசு பணி பதவி உயர்வுகளில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு விதிக் கப்பட்டிருந்த நிபந்தனையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக் கும் மாற்ற வேண்டியதில்லை என்றும் நேற்று தீர்ப்பளித்தது.

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு அரசு பணி பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர் பாக, நாகராஜ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தார். அந்த வழக்கை 5 நீதிபதி கள் கொண்ட அமர்வு விசாரித்து கடந்த 2006-ம் ஆண்டு தீர்ப்பளித் தது. அதில் எஸ்சி, எஸ்டி பிரிவின ருக்கு அரசு பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவது கட்டாய மல்ல. அப்படி வழங்குவதாக இருந்தால், அவர்களது பின்தங் கிய நிலை, அப்பதவியில் அப்பிரி வினருக்கு உள்ள பிரதிநிதித் துவம், அரசியல் சட்டமைப்புக்கு உட்பட்டுள்ளதா ஆகிய நிபந்தனை களை பின்பற்றி வழங்கலாம். இதற்கு எஸ்சி, எஸ்டி பிரிவின ரின் பின்தங்கிய நிலை குறித் தும் அவர்கள் இடஒதுக்கீடு தேவைப்படாத நிலைக்கு சென்று விட்டனரா என்பது குறித்தும் மாநில அரசுகள் ஒரு கணக்கெடுப்பை எடுக்க வேண்டும். ஏனென்றால், பின்தங்கிய நிலையில் இருந்து வளர்ந்த பிரிவினர் மட்டுமே இந்த இடஒதுக்கீடு சலுகையை அனு பவித்து விடக் கூடாது என்பதற் காக இந்த உத்தரவு பிறப்பிக் கப்படுகிறது என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எப்.நாரிமன், எஸ்.கே.கவுல், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் அமர்வு நேற்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு அரசு பணி பதவி உயர்வு தொடர் பாக கடந்த 2006-ம் ஆண்டு நாகராஜ் வழக்கில் உச்ச நீதிமன் றம் அளித்துள்ள தீர்ப்பில் மாற்றம் செய்யத் தேவையில்லை. மேலும், இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர் வுக்கு மாற்ற வேண்டிய அவசிய மும் இல்லை. இருப்பினும் எஸ்சி, எஸ்டி பதவி உயர்வுக்காக, அரசு கள் அவர்களது பொருளாதார நிலை குறித்த தரவுகளைச் சேக ரிக்க வேண்டும், பிரதிநிதித்துவம் இருக்கிறதா என்பதை பார்த்து பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

இந்த உத்தரவு ஏற்கெனவே இந்திரா சஹானி வழக்கில் 9 நீதி பதிகள் அளித்த மண்டல் தீர்ப்புக்கு எதிராக அமைந்துள்ளதால் இந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த உத்தரவு, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பதவி உயர்வு வழங்க இருந்து தடை நீங்க வழிவகுத்துள்ளதாக கருதப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

30 mins ago

இந்தியா

39 mins ago

இந்தியா

19 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

வணிகம்

12 hours ago

விளையாட்டு

12 hours ago

மேலும்