நீதிமன்ற விசாரணையை நேரடியாக ஒளிபரப்பலாம்: உச்ச நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

மக்களுக்கு என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் உரிமை உள்ளதால் நீதிமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. தொண்டு நிறுவனம், வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் உள்ளிட்டோர் இந்த பொதுநல வழக்கை தொடர்ந்தனர்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர்.

அதில், நீதிமன்றங்களில் நடக்கும் முக்கிய வழக்கு விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யலாம். என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ளது. சூரிய ஒளிதான் சிறந்த நோய் தடுப்பு மருந்து. எனவே நேரடி ஒளிபரப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும்’’ எனக் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

க்ரைம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்