காங்கிரஸ் எம்எல்ஏ பதவியில் இருந்து விகே பாட்டீல் விலகல்: பாஜகவில் இணைய திட்டம்?

By செய்திப்பிரிவு

மகாராஷ்டிர மாநில முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான விகே பாட்டீல் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

மக்களவைத் தேர்தலில் போட்டியிட டிக்கெட் தராததால், ராதாகிருஷ்ண பாட்டீலின் மகனான சுஜாய் விகே பாட்டீல், பாஜகவில் இணைந்தார். அவருக்கு அகமது நகர் தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்புக் கொடுத்தது. அங்கு போட்டியிட்ட சுஜாய் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

மகன் பாஜகவில் இணைந்த உடனேயே விகே பாட்டில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ளவில்லை. எனினும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகவில்லை.

இந்தநிலையில் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் தனது எம்எல்ஏ பதவியை இன்று ராஜினாமா செய்தார். சபநாயகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார். இதையடுத்து அவர் பாஜகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக சார்பில் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர் உட்பட காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சிலருக்கு மகாராஷ்டிர மாநில அமைச்சரவையில் இடம் அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.  

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

35 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஆன்மிகம்

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்