முத்தலாக் உள்பட 10 அவசரச் சட்டங்களின் நகல்களும் நாடாளுமன்ற இரு அவைகளில் தாக்கல்

By பிடிஐ

கடந்த பாஜக ஆட்சியின் கடைசிக் கூட்டத் தொடரில் சட்டமாக மாற்ற இயலாமல் பிறப்பிக்கப்பட்ட 10 அவசரச் சட்டங்களின் நகல்கள்  நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று தாக்கல் செய்யப்பட்டன.

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 352 இடங்களில் கைப்பற்றி 2-வது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. கடந்த மாதம் 30-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அரசு பொறுப்பேற்றது. இதைத் தொடர்ந்து புதிய மக்களவை திங்களன்று கூடியது.

புதிய மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்.பி. வீரேந்திர குமார் நியமிக்கப்பட்டு முதல் இரண்டு நாட்கள் புதிய எம்.பி.க்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதைத்தொடர்ந்து நேற்று மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. கோட்டா தொகுதி பாஜக எம்.பி. ஓம் பிர்லா சபாநாயகராக பதவியேற்றுக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து மாநிலங்களவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். 

குடியரசுத் தலைவர் உரை முடிந்த பின் கிடைத்த சிறிய இடைவெளியில், கடந்த 16-வது மக்களவையின் கடைசிக் கூட்டத் தொடரில் பிறப்பிக்கப்பட்ட 10 அவசரச் சட்டங்களும் இரு அவைகளிலும் அறிமுகம் செய்யப்பட்டன.

இந்த 10 அவசரச் சட்டங்களுக்கும் மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து நடப்பு மழைக்காலக் கூட்டத் தொடரில் புதிய மசோதாக்களாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதற்காக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், வி. முரளிதரன் ஆகியோர் இன்று மக்களவையிலும், மாநிலங்களவையிலும் 10 அவசரச் சட்டங்களின் நகல்களையும் தாக்கல் செய்தனர்.

2-வது முறையாக பாஜக தலைமையிலான நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின், 10 அவசரச் சட்டங்களையும் சட்டமாக்க முடிவு செய்து, புதிய மசோதாக்களாகத் தாக்கல் செய்ய உள்ளது. இன்னும் 45 நாட்களுக்குள் இந்த அவசரச் சட்டங்கள் சட்டமாக மாற வேண்டும். இல்லாவிட்டால் காலாவதியாகும் என்பதால், நடப்புக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, முத்தலாக் அவசரச் சட்டம், இந்திய மருத்துவக் கவுன்சில் (திருத்த மசோதா), கம்பெனி திருத்த அவசரச் சட்டம், டெபாசிட்களை முறைப்படுத்தும் அவசரச் சட்டம், ஜம்மு காஷ்மீர் ஒதுக்கீடு அவசரச் சட்டம், ஆதார், சிறப்பு பொருளாதார மண்டல அவசரச் சட்டம், மத்திய கல்வி நிறுவனங்கள் அவசரச் சட்டம் உள்ளிட்ட 10 அவசரச் சட்டங்களின் நகல்கள் தாக்கல் செய்யப்பட்டன.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

வாழ்வியல்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்