11 ஆண்டுகளில் 2.05 லட்சம் கோடிக்கும் அதிகமாக வங்கி மோசடி: ஐசிஐசிஐ, எஸ்பிஐ மற்றும் எச்டிஎப்சி வங்கிகளுக்கு அதிகம் பாதிப்பு

By செய்திப்பிரிவு

கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவில் வங்கிகளில் 50,000க்கும் அதிகமான மோசடி சம்பவங்கள் நடந்தன. ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ) மற்றும் எச்டிஎஃப்சி ஆகிய வங்கிகளில்தான் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆர்பிஐ புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.

2008-09 மற்றும் 2018-19 நிதியாண்டுகளில் மிகப்பெரிய அளவிலான தொகையாக ரூ. 2.05 லட்சம் கோடி மோசடி நடந்துள்ளதாக மொத்தம் 53,334 மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் ஐசிஐசிஐ வங்கியின் 6,811 வங்கிகளில் 5,033.81 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.

இதில் எச்டிஎப்சி வங்கியில் மட்டும் 1,200,79 கோடிகளில் மோசடி நடந்துள்ளதாகவும் இதற்காக 2,497 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அதற்கு அடுத்த நிலையில் எஸ்பிஐ வங்கியில் மட்டும் 23,734.74 கோடிகளில் மோசடி நடந்துள்ளதாகவும் இதற்காக 6,793 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் ஆர்டிஐ வினாவுக்கு மத்திய வங்கி வழங்கிய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மூன்று வங்கிகள் தவிர, பாங்க் ஆஃப் பரோடா 2,160 வழக்குகள் (ரூ. 12,962.96 கோடி மோசடி) பஞ்சாப் நேஷனல் வங்கி 2,047 வழக்குகள் (ரூ 28,700.74 கோடி மோசடி) மற்றும் ஆக்சிஸ் வங்கியில் ரூ. 5,301.69 கோடி மோசடி செய்யப்பட்ட பொது பணத்தை உள்ளடக்கிய 1,944 வழக்குகள் உள்ளன.

பாங்க் ஆஃப் இந்தியாவில் ரூ.12,358.2 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாக 1,872 வழக்குகள் பதிவாகியுள்ளன.

சிண்டிகேட் வங்கியில் 1,783 (ரூ 5830.85 கோடி)

சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ. 9041.98 கோடியில் மோசடி நடந்துள்ளதாக 1, 613 வழக்குகள் பதிவாகியுள்ளதகாவும் தரவுகள் எடுத்துக்காட்டுன்றன

அந்தக் காலகட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.12,644.7 கோடிகளில் நடந்த மோசடிக்காக 1,115 வழக்குகள் பதிவாகியுள்ளன. ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியில் 1040 வழக்குகள் ரூ 5,598.23 மோசடி செய்யப்பட்டதற்காகப் பதிவாகியுள்ளன.

அதேபோல, யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா, 944 வழக்குகள் 3052.34 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதற்காக பதிவு செய்யப்பட்டுள்ளன. ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர் 395 வழக்குகள் ரூ 742.31 கோடி மோசடி செய்யப்பட்டதற்கும், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா வங்கியில் 386 வழக்குகளும் (ரூ 1178.77 கோடிமோசடி),

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி 276 வழக்குகளும் (ரூ 1154.89 கோடி மோசடி), யூகோ வங்கி 1081 வழக்குகளும் (ரூ 7104.77 கோடி மோசடி) தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் லிமிடெட் 261 வழக்குகளும் (493.92 கோடி மோசடி) மற்றும் லட்சுமி விலாஸ் பேங்க் லிமிடெட் வங்கியில் 862.64 கோடி மோசடி நடந்துள்ளதற்காக 259 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

வெளிநாட்டு வங்கிகளிலும் மோசடி

இந்தியாவில் செயல்படும் சில வெளிநாட்டு வங்கிகளும் கடந்த 11 நிதியாண்டில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக மோசடி வழக்குகளைப் பதிவு செய்துள்ளன.

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கிக் கார்ப்பரேஷனில்  ரூ. 86.21 கோடி மோசடிக்காக 1,862 வழக்குகளும், சிட்டி வங்கியில் ரூபாய் 578.09 கோடி மோசடிக்காக 1,764 வழக்குகளும், ஹாங்காங் மற்றும் ஷாங்காய் வங்கி கார்ப்பரேஷன் (எச்எஸ்பிசி) லிமிடெட் வங்கியில் ரூபாய் 312.1 கோடி மோசடிக்காக 1,173 வழக்குகளும்  மற்றும் ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்து பிஎல்சி ரூ.12.69 கோடி மோசடிக்காக 216 வழக்குகள் பதிவாகியுள்ளதாக ரிசர்வ் வங்கி அளித்த தகவலில் உள்ள புள்ளிவிவரம் கூறுகிறது.

ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் வங்கியில் ரூ.694.61 கோடி மோசடிக்காக 274 வழக்குகளும், ஜம்மு காஷ்மீர் வங்கி லிமிடெட் வங்கியில் ரூ 1639.9 கோடி மோசடிக்காக 142 வழக்குகளும் இந்தியாவின் தொழில்துறை நிதி ஆணையம் ரூ.671.66 கோடி மோசடிக்காக 9 வழக்குகளும், தி தனலட்சுமி வங்கி லிமிடெட் வங்கியில் ரூ.410.93 கோடி மோசடிக்காக 89 வழக்குகளும், விஜயா வங்கியில் ரூ.1,748.9 கோடி மோசடிக்காக  639 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

யெஸ் பேங்க் லிமிடெட் நிறுவன வங்கியில் ரூ.311.96 கோடி மோசடிக்காக 102 வழக்குகளும் பதிவு செய்துள்ளது. பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் லிமிடெட் வங்கிமூலம் ரூ.0.02 கோடி அல்லது ரூ.2 லட்சம் மோசடிக்காக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளை அறிக்கை கோரும் காங்கிரஸ்

கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.71,542.93 கோடி மோசடி நடந்துள்ளதாக 6,801 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வரையறுக்கப்பட்ட வர்த்தக வங்கிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிதி நிறுவனங்களால் அறிவிக்கப்பட்டன. இச்செய்தியை பிடிஐ கடந்த வாரம், ஜூன் 3-ம் தேதி வெளியிட்ட மறுநாளே, காங்கிரஸ் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது, அப்போது ''பாஜக அரசாங்கம் வங்கி மோசடி குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்'' என கோரிக்கை வைத்தது.

நிதியாண்டுகள் வாரியாக மொத்த மோசடி விவரங்கள்

2008-09 ஆம் நிதியாண்டில் மட்டும் ரூ.1,860.09 கோடிகளில் மோசடி நடந்துள்ளதாக மொத்தம் 4,372 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல 2009-10 ஆம் நிதியாண்டில் மட்டும் ரூ.1,998.94 கோடி மோசடி செய்ததாக 4,669 வழக்குகள் பதிவாகியுள்ளன.

2010-11 மற்றும் 2011-12 ஆகிய ஆண்டுகளில் முறையே ரூ.3,815.76 கோடி, 4,501.15 கோடி மோசடி நடந்துள்ளதாக மொத்தம் 4,534 மற்றும் 4,093 வழக்குகள் பதிவாகியுள்ளன.

கடந்த 2012-13 ஆம் நிதியாண்டில் 8,590.86 கோடி மோசடி நடந்ததாக 4,235 வழக்குகள் பதிவாகின. 2013-14 ஆம் நிதியாண்டில் ரூ.10,170.81 கோடி மோசடி நடந்ததாக 4,306 வழக்குகள் பதிவாகியுள்ளன. 2014-15ம் நிதியாண்டில் ரூ.19,455.07 கோடி மோசடி நடந்துள்ளதாக 4,639 வழக்குகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

2015-16 மற்றும் 2016-17 நிதியாண்டுகளில் முறையே ரூ .18,698.82 கோடி மற்றும் ரூ. 23,933.85 கோடியை உள்ளடக்கிய மோசடிகள் தொடர்பாக 4,693 மற்றும் 5.076 வழக்குகள் பதிவாகியுள்ளன.

இவ்வாறு ரிசர்வ் வங்கி அளித்துள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

25 mins ago

விளையாட்டு

16 mins ago

தமிழகம்

40 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்