இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த தமிழ் வாழ்க

By செய்திப்பிரிவு

நாடாளுமன்ற மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் பதவியேற்கும்போது தமிழ் வாழ்க என முழக்கம் எழுப்பி பதவியேற்றனர். இந்நிலையில் ட்விட்டரில் தமிழ் வாழ்க என்ற ஹேஷ்டேக் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயககூட்டணி அமோக வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 17-வது மக்களவையின் முதல்கூட்டத் தொடர் நேற்று காலை தொடங்கியது. மக்களவை இடைக்கால சபாநாயகராக வீரேந்திர குமார் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த பதவிப் பிரமாணம் செய்து  வைத்தார்.

இதன்பிறகு இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் புதிய எம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். வாரணாசி தொகுதி எம்.பி.யாக பிரதமர் மோடி பதவியேற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி உள்ளிட்டவர்கள் வரிசையாகப் பதவியேற்றனர். நேற்று 313 எம்.பி.க்கள் பதவியேற்ற நிலையில் இன்று மீதமுள்ள உறுப்பினர்கள் எம்.பி.க்களாகப் பதவி ஏற்றனர்.

தமிழக எம்.பி.க்கள் தொகுதி வரிசை வாரியாக இன்று தமிழில் பதவியேற்றனர். திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜெயக்குமார் தமிழில் பதவிப் பிரமாணம் ஏற்றார். காந்தி, அம்பேத்கர், காமராஜர் வாழ்க என்று கூறி அவர் பதவியேற்றார். இதுபோலவே வட சென்னை திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி பதவியேற்றார். தொடர்ந்து தமிழக எம்.பி. தயாநிதி மாறன் பெரியார், கருணாநிதி வாழ்க எனக் கூறி பதவியேற்றார்.

தொடர்ந்து டி.ஆர், பாலு, செல்வம், ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் பதவியேற்றனர். விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார் தமிழ் வெல்க எனக் கூறி பதவியேற்றார். தொடர்ந்து பல்வேறு தொகுதி எம்.பி.க்களும் தமிழில் பதவியேற்றனர்.

கரூர் தொகுதி எம்.பி ஜோதி மணி பதவியேற்றபோது வாழ்க தமிழ், வாழ்க தாயகம் எனக் கூறினார்.   பெரம்பூர் தொகுதி எம்.பி. பாரிவேந்தர் பதவியேற்றுக் கொண்டபோது ‘தமிழகம் வாழ்க, இந்தியாவும் வாழ்க’ என கூறி முடித்தார்.

மதுரை தொகுதி எம்.பியாக பதவியேற்றுக் கொண்ட சு.வெங்கேடசன் தமிழில் பதவியேற்றுக் கொண்டார். அவர் தமிழ் வாழ்க மார்க்சியம் வாழ்க எனக் கூறினார். 

சிதம்பரம் தொகுதி எம்.பி. தொல்.திருமாவளவன் ‘அம்பேத்கர், பெரியார்’ வாழ்க, வாழ்க ஜனநாயகம்’ எனக் கூறி பதவியேற்றுக் கொண்டார்.  இதுபோலவே திமுக எம்.பி கனிமொழியும் தமிழில் பதவியேற்றுக் கொண்டார்.

தேனி தொகுதியாக பதவியேற்றுக் கொண்ட அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமார், எம்ஜிஆர், ஜெயலலிதா வாழ்க, வந்தேமாதரம், ஜெய்ஹிந்த் எனக் கூறினார். 

தமிழக எம்.பி.க்கள் பதவியேற்றவுடன் தமிழ் வாழ்க, தமிழ் வெல்க என்று முழக்கங்களை எழுப்பியதற்கு சமூக வலைதளங்களில் அதிக ஆதரவு கிடைத்துள்ளது. இந்நிலையில் ட்விட்டரில் தமிழ் வாழ்க என்ற ஹேஷ்டேக் அகில இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பெற்றுள்ளது. 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்