மக்களவை சபாநாயகர் பாஜக எம்.பி. ஓம் பிர்லா?

By செய்திப்பிரிவு

மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக எம்.பி ஓம் பிர்லா நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயககூட்டணி அமோக வெற்றி பெற்றுமத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 17-வது மக்களவையின் முதல்கூட்டத் தொடர் நேற்று காலை தொடங்கியது.

முன்னதாக மக்களவை இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த பதவி பிரமாணம் செய்து  வைத்தார்.

இதன்பிறகு இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் புதிய எம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வைருகிறார். நேற்றும் இன்றும் எம்.பி.க்கள் பதவி ஏற்கின்றனர்.

இதைத்தொடர்ந்து மக்களவை சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. மக்களவையில் பாஜகவுக்கு 303 எம்.பி.க்கள் உள்ளனர். கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 350க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் உள்ளனர்.

இதனால் ஆளும் கட்சி சார்பில் நிறுத்தப்படுபவர் சபநாயகராக தேர்வு செய்யப்படுவார் என்பது உறுதியாக தெரிகிறது. எதிர்க்கட்சிகள் வேட்பாளரை நிறுத்தாவிட்டால் ஆளும் கட்சி வேட்பாளர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படவும் வாய்ப்புள்ளது.
இந்தநிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா தொகுதி பாஜக எம்.பி ஓம் பிர்லா சபாநாயகராக நிறுத்தப்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனை பாஜக அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும் பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டாவை அவரது இல்லத்தில் ஓம்.பிர்லா இன்று காலை சந்தித்து பேசினார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘ஒரு தொண்டனாகவே எங்கள் கட்சியின் செயல் தலைவரை நான் சந்தித்து பேசினேன்’’ எனக் கூறினார். அதேசமயம் ஓம் பிர்லாவின் மனைவி அமிதா பிர்லா கூறுகையில் ‘‘இது எங்கள் குடும்பத்துக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம். கட்சி தலைமைக்கு மிகவும் நன்றி’’ எனக் கூறினார்.

கோட்டா தொகுதியில் இருந்து 2 முறை எம்.பியாக தேர்வாகியுள்ள ஓம் பிர்லா, முன்பு கோட்டா தெற்கு சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவாக மூன்று முறை பதவி வகித்தவர். நீண்டகாலம் பாஜக நிர்வாகியாக இருந்து வருகிறார். 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கோட்டா தொகுதியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராம் நாராயண் மீனாவை 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

4 hours ago

மேலும்