சுற்றுலாப் பயணிகளுக்காக உயிர்த்தியாகம் செய்த வழிகாட்டி குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டுத் தொகை: காஷ்மீர் கவர்னர் உத்தரவு

By பிடிஐ

காஷ்மீரின் படகு விபத்தில் நீரில் அடித்துச்சென்ற சுற்றுலாப் பயணிகளை துணிச்சலோடும் கடமையுணர்ச்சியோடும் காப்பாற்றிய வழிகாட்டிக்கு மரியாதை செலுத்தும்விதமாக அவரது குடும்பத்தினருக்கு காஷ்மீர் கவர்னர் சத்ய பால் மாலிக் ரூ.5 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கி உத்தரவிட்டார்.

ரூஃப் அகமது தார், ஒரு பதிவுபெற்ற தொழில்முறை வழிகாட்டி. இவர் நேற்று மாலை (வெள்ளிக்கிழமை) சுற்றுலாப் பயணிகளை அழைத்துக்கொண்டு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் லிட்டர் ஆற்றில் படகுப் பயணம் செய்தார்.

அப்போது திடீரென கடுமையான காற்றுவீசியது. இதனால் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் நீரில் மூழ்கவிடாமல் பயணிகளை காப்பாற்றுவதற்காக மிகப்பெரிய போராட்டமே நடத்தினார் அகமது தார்.

வழிகாட்டி ரூஃப் அகமது தார் தன் உயிரையே பணயம் வைத்த துயரச் சம்பவம் காஷ்மீர் மாநிலத்தையே உலுக்கியெடுத்துள்ளது.

சம்பவம் நடந்த மவூர்வா என்ற இடம் இடம் ஸ்ரீநகரிலிருந்து 96 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

இப்படகு பயணத்தில் பயணம் செய்தவர்கள் மொத்தம் 5 பேர் என்றும் அவர்களில் இருவர் மேற்கு வங்க தம்பதி என்றும் மற்ற மூவர் உள்ளூர்வாசிகள் என்பதும் தெரிய வந்துள்ளது. வழிகாட்டி அகமது தார் உயிரிழந்த நிலையில் உள்ள அவரது உடல் இன்று (சனிக்கிழமை) ஆற்று நீரில் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து ராஜ்பவன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், கவர்னர் சத்யபால் மாலிக், ''வழிகாட்டி அகமது தார், வெள்ளிக்கிழமை லிட்டர் ஆற்றில் சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்ற தனது உயிரையே பறிகொடுத்துள்ளதன்மூலம் உண்மையான வாழ்க்கை நாயகனாக மாறியுள்ளார் என்று கூறியதோடு கவர்னர் சுற்றுலா வழிகாட்டியின் துணிச்சலை கவுரவப்படுத்தியுள்ளார்.

கவர்னர், மறைந்த அகமது தாரின் ஆத்மா சாந்தியடையவும் சோகத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் பலத்தை அளிக்கவும் பிரார்த்தனை செய்தார்.

தன்னலமற்ற செயலின்மூலம் முன்மாதிரியாக திகழும் அவருக்கு மரியாதை சேர்க்கும் வகையில் ஆளுநர் தார் குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் நிதி உதவி உத்தரவிட்டார்.

இவ்வாறு கவர்னரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 mins ago

தொழில்நுட்பம்

43 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்