ஆந்திர முதல்வராக முறைப்படி பொறுப்பேற்றார் ஜெகன் மோகன் ரெட்டி

By செய்திப்பிரிவு

ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி, முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்பான கோப்பில் அவர் கையெழுத்திட்டார்.

மக்களவைத் தேர்தலோடு சேர்த்து ஆந்திர மாநிலத்தில் உள்ள 176 சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடந்தது.இதில் சட்டப்பேரவையில் 151 இடங்களை ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வென்றது. மக்களவையில் 25 இடங்களையும் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து ஆந்திராவின் புதிய முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றுக் கொண்டார்.

இந்தநிலையில், ஆந்திர மாநில முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஜெகன் மோகன் ரெட்டி இன்று முறைப்படி முதல்வர் அலுவலகம் சென்று பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். முன்னதாக அதிகாரிகள், தலைமைச்செயலக ஊழியர்கள் அவரை வரவேற்றனர்.

முதல்வர் அலுவலகத்தில் வழிபாடு நடத்திய அவர் சுகாதாரத் துறையில் பணியாற்றி வரும் ‘ஆஷா' ஊழியர்களுக்கு மாத 10,000 ரூபாயாக உயர்த்தும் ஒப்பந்தம், சுகாதார திட்டம், பத்திரிக்கையாளர்களுக்கான மருத்துவ காப்பீடு உள்ளிட்ட கோப்புகளில் கையெழுத்திட்டார்.

இதைத்தொடர்ந்து இன்று பிற்பகல் 25 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்கவுள்ளனர். இதில் 5 பேருக்கு துணை முதல்வர்கள் பொறுப்பு வழங்கப்படும் என ஜெகன் மோகன் ரெட்டி ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

மேலும்