ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மதிப்பெண் சலுகை அளிக்கும் அரசாணை செல்லாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 55 சதவீத மதிப்பெண் பெற்றால் போதும் என்ற அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற 60 சதவீத மதிப் பெண் பெற வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் 2010-ல் உத்தரவிட்டது.

இந்த அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர்.

இந்நிலையில், ஆதிதிராவிடர் கள், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அந்தந்த மாநில அரசுகள் ஆசிரியர் தகுதித்தேர்வில் சலுகை மதிப்பெண் வழங்கலாம் என தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதி ஒன்றை கொண்டுவந்தது. அதன்படி தமிழகத்தில் ஆதி திராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தகுதித் தேர்வில் வெற்றிபெற 55 சதவீத மதிப்பெண் பெற்றால் போதும் என தமிழக அரசு 2014 பிப்ரவரி 2-ம் தேதி அரசாணை பிறப்பித்தது.

2012-ம் ஆண்டு வரை நடந்த தகுதித்தேர்வில 60 சதவீத மதிப் பெண் பெற வேண்டும் எனக் கூறிவிட்டு, தற்போது மதிப்பெண் சலுகை வழங்கியது நியாய மற்றது. மேலும் மதிப்பெண் சலுகை வழங்கும் விதியை கொண்டுவருவதற்கு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சி லுக்கு அதிகாரம் கிடையாது. மத்திய அரசுக்கு மட்டும்தான் அந்த அதிகாரம் உண்டு. எனவே, மதிப்பெண் சலுகை வழங்குவது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும். 60 சதவீத மதிப் பெண் அடிப்படையில் ஆசிரியர் நியமனங்களை மேற்கொள்ளவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை முடிந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர்.

இந்த வழக்கில் நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. அதில், மாணவர்களுக்கு சிறந்த கல்வி அளிக்கும் நோக்கத்தில் தகுதியானவர்கள் ஆசிரியர்களா கத் தேர்வு செய்யப்படுகின்றனர்.

அதற்காக நடத்தப்படும் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகையை வழங்குவதை ஏற்க முடியாது.

எனவே ஆசிரியர் தகு தித் தேர்வில் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மதிப்பெண் சலுகை வழங்கும் அரசாணை செல்லாது என்று கூறி, அந்த அரசாணை ரத்து செய்யப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

இருப்பினும் இந்த அரசாணை அடிப்படையில் பணி நியமனங்கள் நடை பெற்றிருந்தால் அதில் தலை யிடக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஓடிடி களம்

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்