மார்ச் 16 முதல் 18-ம் தேதி வரை 3 நாட்கள் காங்கிரஸ் மாநாட்டை நடத்துவதற்கு குழுக்களை நியமித்த ராகுல் காந்தி

By செய்திப்பிரிவு

காங்கிரஸ் கட்சி மாநாடு நடக்க உள்ள நிலையில், பல்வேறு குழுக்களைக் கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று நியமித்தார்.

காங்கிரஸ் கட்சி மாநாடு டெல்லியில் மார்ச் 16-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. இதை முன்னிட்டு கட்சியின் மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, திட்டக் குழு மற்றும் அதன் 4 துணைக் குழுக்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஏற்படுத்தினார். மேலும், கட்சி சட்டத்திட்டங்கள் திருத்தக் கமிட்டி ஒன்றையும் உருவாக்கி உள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கட்சித் திட்டக் குழுத் தலைவராக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் செயல்படுவார். ஒருங்கிணைப்பாளராக முகுல் வாஸ்னிக் இருப்பார். அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொருளாளர் மோதிலால் வோரா, மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவுக்குத் தலைமை வகிப்பார். பொதுச் செயலாளர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஒருங்கிணைப்பாளராக இருப்பார்.

சட்டத் திருத்த குழுவில் கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஜனார்த்தன் திவிவேதி ஆகியோர் முறையே தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவின் உறுப்பினர்களாக அகமது படேல், ப.சிதம்பரம், மல்லிகார்ஜுன கார்கே, கபில்சிபல் உட்பட மூத்த தலைவர்கள் 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். திட்டக் குழுவில் 44 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும், அரசியல், பொருளாதார விவகாரங்கள், சர்வதேச விவகாரங்கள், வேளாண் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான 4 துணைக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்களுக்கு தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு காங்கிரஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மார்ச் 16-ம் தேதி தொடங்கும் காங்கிரஸ் மாநாட்டில், 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக.வை தோல்வி அடையச் செய்வது, கர்நாடகா, ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களை சந்திக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள், திட்டங்கள் போன்றவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்ற பின்னர் நடக்கும் முதல் மாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

7 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்