ராமநவமி கொண்டாட்டம்: மதக்கலவரத்தில் ஈடுபட்ட முக்கிய கைதி தப்பியோட்டம்

By பிடிஐ

பிஹார் மாநிலத்தில் அவுரங்காபாத் நகரில் வகுப்புவாத மோதலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர் போலீஸ் காவலில் இருந்து தப்பிச்சென்றார். இதற்கு,  காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

பீகார் மாநிலத்தில் இந்த வார தொடக்கத்தில் ராமநவமி கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் நடைபெற்ற ஊர்வலத்தின்போது 150 பேர் கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

போலீஸ் காவலில் இருந்து தப்பிய நபர் கடந்த ஆண்டுகளில் ராம நவமி ஊர்வலத்தை நடத்தியவர்களோடு தொடர்புடையவர் என்று காவல் கண்காணிப்பாளர் சத்ய பிரகாஷ் தெரிவித்தார்.

போலீஸ் காவலிலில் தப்பிச் சென்றதற்காக புதிய எப்ஐஆர் அவருக்கு எதிராக பதிவுசெய்யபட்டுள்ளது. அவர் மீது கைதுசெய்வதற்கான வாரன்ட் பிறப்பிக்கப்பட்டு அவர் வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் இவர் தானாக வந்து சரணடையாவிட்டால் அவரது சொத்துக்கள் முடக்கப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கண்டனம்

பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் அரசில் நடந்த இந்த சம்பவத்திற்காக காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

இதுகுறித்து பீகார் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தற்காலிக தலைவர் காகப் காட்ரி பாட்னாவில் பிடிஐயிடம் தெரிவித்ததாவது:

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தல்வர் நிதிஷ்குமாரின் தலைமையிலான நிர்வாகத்தின்மீது ஆதிக்கம் செலுத்திவருகின்றன. முதல்வர் நிதிஷ்குமாரின் செயல்படாத ஆட்சிமுறைக்கு இச்சம்பவம் மற்றுமொரு உதாரணம்.

கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், போலீஸ் காவலில் இருந்து தப்பிச்சென்றது ஊடகங்களில் அறிவிக்கப்பட்ட பிறகு ஒருநாள் கழித்துதான் காவல்அதிகாரிகளுக்கே தெரிகிறது என்பது எப்படி சாத்தியம்?

பாஜக தனது திட்டத்தை தொடரும், ஆனால் முதலமைச்சரின் நற்பெயருக்கு இப்போது களங்கம் ஏற்பட்டுள்ளது. இந்த வாரம் கவர்னர் சத்திய பால் மாலிக்கை சந்தித்து, ஔரங்காபாத் கலவரம் பற்றி ஒரு விவர அறிக்கையை அளித்துள்ளோம்.

இவ்வாறு காட்ரி தெரிவித்தார்.

அவுரங்கபாத் நகரில் ராம நவமி விழாவின்போது வகுப்புக் கலவரம் வெடித்தது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மத ஊர்வலம் நடைபெற்றது. நகரில் ஊர்வலம் சென்றுகொண்டிருந்தபோது ஆத்திரமூட்டக்கூடிய கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அப்போது ஊர்வலத்தை நோக்கி கற்கள் வீசப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து வன்முறையும் தீவைப்பு சம்பவங்களும் அங்கு பரவியது. நகரில் 144 தடைச்சட்டம அமல்படுத்த கட்டாயப்படுத்தப்பட்டது என்றும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்