எதிர்மறை அரசியலை மக்கள் நிராகரித்துவிட்டனர்: தேர்தல் முடிவு குறித்து பிரதமர் கருத்து

By செய்திப்பிரிவு

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் திரிபுராவில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது, நாகாலாந்தில் என்டிபிபி-பாஜக கூட்டணி ஆட்சி பீடத்தில் அமரவுள்ளது. மேகாலயாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் நேற்று கூறும்போது, “திரிபுராவில் பாஜகவுக்குக் கிடைத்த வெற்றி சாதாரண வெற்றி கிடையாது. எதிர்மறை அரசியல் செய்பவர்களை அவர்கள் நிராகரித்துவிட்டனர். மூர்க்கத்தனம், அச்சுறுத்தல்களை வீழ்த்தி ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது. பயத்தையும் மீறி அமைதியும், அஹிம்சையும் வென்றுள்ளது. திரிபுரா மக்கள் எதிர்பார்த்த நல்லாட்சியை நாங்கள் தருவோம். திரிபுராவில் சாதனை வெற்றியைப் படைத்துள்ளோம். திரிபுரா மக்களுக்கு நன்றி. நாகாலாந்து,மேகாலயா மாநிலங்களின் நலனுக்காகவும் மத்திய அரசு தொடர்ந்து பாடுபடும்” என்று தெரிவித்துள்ளார். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஆன்மிகம்

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்