பாஜவுக்கு அடுத்த நெருக்கடி: நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நோட்டீஸ்

By பிடிஐ

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக, நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இன்று மக்களவையில் நோட்டீஸ் அளித்துள்ளது.

ஏற்கனவே, முதல்வர் சந்திரபாபு தலைமையிலான தெலங்கு தேசம் , ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் , காங்கிரஸ் ஆகியவை கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் அளித்துள்ள நிலையில், இப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நோட்டீஸ் அளித்துள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தெலங்கு தேசம்கட்சி , ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தும், நிதித் தொகுப்பும் வழங்காததைக் கண்டித்து கூட்டணியில் இருந்து வெளியேறியது. இதையடுத்து, நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர மக்களவை சபாநாயகரிடம் தெலுங்கு தேசம் கட்சி நோட்டீஸ் அளித்தது.

இதற்கிடையே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர கடந்த வாரம் நோட்டீஸ் அளித்து. ஆனால், கடந்த வாரத்தில் மக்களவையில் தொடர் அமளி நிலவியதன் காரணமாக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படவில்லை. மேலும், காங்கிரஸ் கட்சியும் இது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அளித்துள்ளது. இதனால் 3 கட்சிகள் அளித்துள்ள நோட்டீஸ் நிலுவையில் இருக்கிறது.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைத் தலைவர் பி.கருணாகரன் இன்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் பாஜக அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் அளித்தார். மக்களவை நாளை வழக்கம் போல் செயல்பாட்டு வரும் போது, இந்த நோட்டீஸ் எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

ஏற்கனவே 3 கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நோட்டீஸ அளித்துள்ள நிலையில், ஆளும் பாஜகவுக்கு மேலும் நெருக்கடி அளிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்த நோட்டீஸ் அளித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 mins ago

வணிகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்