திரிபுரா இனி வளர்ச்சி பெறும்: தேர்தல் வெற்றி குறித்து ஆதித்யநாத் கருத்து

By செய்திப்பிரிவு

 திரிபுராவில் பாஜக வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைப் பெற்றுள்ளது என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

திரிபுராவில் 25 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி ஆட்சியை இழக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. இதனால், இதனால் திரிபுரா தேர்தல் முடிவகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் திரிபுரா தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் பாஜக சற்று முன்னிலை வகித்தது. பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி, பாஜகவை விட கூடுதலான தொகுதிகளில் முன்னிலை வகித்தது. எனினும் தற்போது பாஜக கூட்டணி மொத்தமுள்ள 59 தொகுதிகளில் 40க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னணி வகித்து வருகிறது. இந்த வெற்றியை பாஜக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதுகுறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:

''திரிபுராவில் பாஜக வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் இந்த வெற்றிக்காக கடுமையாக உழைத்துள்ளனர். 25 ஆண்டுகால ஆட்சியை இடதுசாரி கூட்டணி ஆட்சியை திரிபுரா மக்கள் புறக்கணித்துள்ளனர். திரிபுரா மாநிலம் இனிமேல் வளர்ச்சி பெறும்'' எனக் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

5 hours ago

தமிழகம்

7 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்