ராணுவ உடையில் பாஜக தொண்டர்கள்: முதல்வர் மம்தா பானர்ஜி சந்தேகம்

By பிடிஐ

மேற்கு வங்க மக்களவைத் தேர்தலுக்காக, சிஆர்பிஎப் சீருடைகளில் பாஜக, ஆர்எஸ்எஸ் தொண்டர்களை மத்திய அரசு அனுப்பியிருக்கக் கூடும் என அம்மாநில முதல்வர் மம்தா சந்தேகம் எழுப்பியுள்ளார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மேற்குவங்கத்தில் உள்ள பசந்தி பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மம்தா பானர்ஜி பேசியதாவது:

இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில், மேற்கு வங்கத்தில் தேர்தல் பணிகளுக்காக அதிக அளவிலான சிஆர்பிஎப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்வதுதான் இவர்களின் பணியாகும். ஆனால், இங்கு அனுப்பப்பட்டிருக்கும் சிஆர்பிஎப் வீரர்களோ, வாக்குச்சாவடிகளில் வரும் பொதுமக்களிடம் பாஜகவுக்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். இந்தப் பணியை மேற்கொள்ளவே அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனை பார்க்கும்போது, சிஆர்பிஎப் சீருடைகளில் பாஜக, ஆர்எஸ்எஸ் தொண்டர்களையே மத்திய அரசு அனுப்பியிருக்கும் என சந்தேகம் எழுகிறது.தேர்தலில் வெற்றி பெற எந்த நிலைக்கும் பாஜக இறங்கும் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

7 mins ago

தமிழகம்

44 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஓடிடி களம்

12 hours ago

மேலும்