மாநிலங்களவை எம்.பி பதவி: அமித் ஷா, ஸ்மிருதி இரானி, கனிமொழி ராஜினாமா

By செய்திப்பிரிவு

பாஜக சார்பில் மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த அமித் ஷா, ரவி சங்கர் பிரசாத், ஸ்மிருதி இரானி, திமுக எம்.பி கனிமொழி ஆகியோர் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதால் தங்கள் மாநிலங்களவை எம்.பி பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைவர் அமித் ஷா, அத்வானி நீண்டகாலம் எம்.பி.யாக இருந்த காந்திநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதுபோலவே உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிருதி இரானி வெற்றி பெற்றுள்ளார்.

இருவரும் தற்போது குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளனர். இதுபோலவே பாஜக சார்பில் தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பிஹார் மாநிலம் பாட்னா சாகிப் தொகுதியில் சத்ருகன் சி்ன்ஹாவை எதிர்த்து போட்டியிட்டு வென்றார்.

தமிழகத்தின் சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள கனிமொழி தற்போது தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

இவர்கள் அனைவரும் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதால் தங்களது மாநிலங்களவை எம்.பி பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இவர்கள் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவை செயலகம் தெரிவித்துள்ளது.

பிஹாரில் ரவிசங்கர் பிரசாத் ராஜினாமா காரணமாக காலியும் இடத்தில் லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு வழங்க பாஜக முன் வந்துள்ளது. தற்போது மத்திய அமைச்சராக உள்ள அவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 min ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

10 hours ago

மேலும்