பிரசாந்த் பூஷனுக்கு பார்வையாளர்கள் வருகைப் பதிவேடு எப்படி கிடைத்தது?- சிபிஐ இயக்குநர் கேள்வி

By செய்திப்பிரிவு

தனது அதிகாரப்பூர்வ வீட்டில் இருந்த பார்வையாளர்கள் வருகைப் பதிவேடு எப்படி கிடைத்தது என பிரசாந்த் பூஷன் விளக்க வேண்டும் என சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா தெரிவித்துள்ளார்.

2ஜி அலைக்கற்றை ஊழல் மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்குகள் உச்ச நீதிமன்றத் தின் நேரடி கண்காணிப்பில் நடந்து வருகின்றன. இந்த வழக்குகளில் தொடர்புடையவர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவை அவரது வீட்டில் பலமுறை சந்தித்துப் பேசியதாக குற்றம்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ இயக்குநர் அதிகாரப்பூர்வ வீட்டில் இருந்த பார்வையாளர் வருகைப் பதிவேட்டை உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷன் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் அந்த பதிவேட்டை அளித்தவர் யார் என்பதை பிரசாந்த் பூஷன் தெரிவித்தாக வேண்டும், அந்த பொறுப்பை அவர் தட்டிக் கழிக்க முடியாது என ரஞ்சித் சின்ஹா தெரிவித்துள்ளார்.

நிலக்கரிச் சுரங்க உரிமம் ஒதுக்கீடு மற்றும் 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சந்தித்த விவகாரம் குறித்து, உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா நேற்று (வெள்ளிக்கிழமை) பதில் மனு தாக்கல் செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 mins ago

இந்தியா

16 mins ago

இந்தியா

23 mins ago

இந்தியா

34 mins ago

இந்தியா

38 mins ago

இந்தியா

39 mins ago

இந்தியா

47 mins ago

இந்தியா

50 mins ago

இந்தியா

56 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

மேலும்