மோடி தியான காட்சிகள் ஒளிபரப்ப தடை; சந்திரபாபு நாயுடு தேர்தல் ஆணையத்திடம் வேண்டுகோள்

By பிடிஐ

பிரதமர் நரேந்திர மோடி இமயமலைக் கோயில்களில் ஈடுபடும் தியானக் காட்சிகள் தேர்தல் நடத்தை மீறலாக உள்ளதால் டிவியில் ஒளிபரப்பப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவரும் தெலுங்கு தேச தலைவருமான ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பாஜகவை மீண்டும் ஆட்சியில் வரவிடாமல் செய்வதற்காக புதுடெல்லியில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் பிரதமர் மோடி இமயமலையில் உள்ள பத்ரிநாத் மற்றும் கேதாரிநாத் கோவில்களுக்கு சென்று அங்கு குகைகளில் தியானம் மேற்கொள்ளும் காட்சிகள் நீண்டநேரமாக தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டு வருகின்றன.

இது முன்றிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு முரணான ஒன்று கூறிய சந்திரபாபு நாயுடு அதிகாரத்திற்கு ஆசைப்பட்ட ஒரு நபரின் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் இவை. இதனை ஒளிபரப்புவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

தேர்தல ஆணையர் சுனில் அரோராவுக்கு நாயுடு எழுதியுள்ள கடிதத்தின் விவரம் வருமாறு:

பிரதமரின் இத்தகைய நடவடிகைகளை நிறுத்தாமல் தொடர்ந்து ஒளிபரப்பப் படுமேயானால் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் செயலாகவே இது

அமையும். மேலும் தேர்தல் ஆடுகளத்தை திட்டமிட்ட அளவில் பாதிப்பு ஏற்பவடுத்தும். இதை தடுத்துநிறுத்த தேர்தல் ஆணையம் கடமைப்பட்டுள்ளது.

மோடி, பத்ரிநாத் மற்றும் கேதார் நாத் அலுவலகப்பூர்வமாக சென்றதாகக் கூறப்பட்டாலும் தியானத்தில் ஈடுபடுவது அவருடைய தனிப்பட்ட நடவடிக்கைகள் ஆகும். இதை தேர்தல் நேரத்தில் செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவது முற்றிலும்  தேர்தல் நடத்தை விதிமீறலாகும்.

இதுஒருவகை மறைமுக தேர்தல் பிரச்சாரமே யாகும். பொது ஒளிப்பரப்புகளின்மூலம் இவை காட்டப்படுவதன்மூலம் ஒரு நபரின் மத நம்பிகைகள் மூலம் வாக்காளர்களை இது பாதிக்கிறது.

குகைகளில் தியானம் இருப்பது, பல்வேறு உடைகளில் நடைபயிற்சி மேற்கொள்வது, பத்ரிநாத் மற்றும் கேதார் பயணத் திட்டத்தில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவது ஆகிய நடவடிக்கைகள் மூலம் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த மக்களுக்கு மாறுவேடங்களில் தோன்றி இப்படி செயல்படுவது மறைமுகமாகவும்

நேரடியாகவும் பல்வேறு குறிப்புகளை வழங்குவதை காணமுடிகிறது. எனவே இதனை தேர்தல் ஆணையம் உடனே நிறுத்த வேண்டும். இதனால் ஏதும் அறியாத பார்வையாளர் ஒருவர் பிரதமர் மற்றும் பாஜகவின் வேறுபட்ட

விதிகளில் உள்ள பொது நம்பிக்கைகளில் மேலும் வலுப்பெறுவார். ஆனால் மற்ற அரசியல் கட்சிகள் நடைமுறை விதிகளில் உள்ளன.

"இத்தகைய தவறான செயல்களை உடனடியாக நிறுத்த வேண்டும். நியாயமற்ற மற்றும் ஒழுங்கீனமான இத்தகைய பிரச்சாரம் மற்றும் இது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் வாக்காளர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கும்,

அசோக் லாவாசா,

தேர்தல் கமிஷனர் அசோக் லாவாசா, பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க தலைவர் அமித் ஷா விவகாரங்களில் தேர்தல் ஆணையத்தின் மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை  வைத்துள்ளார்.

இவரது வேறுபட்ட கருத்துக்கள்  சிறுபான்மையின கருத்து என்று கூறி அவரது முடிவுகளை கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டு வரும் தேர்தல் ஆணையத்தின் நேர்மையற்ற தன்மை தன்னிச்சையாக இயங்குவதாக உள்ளது. இது  தேர்தல் ஆணையத்தின் நிலைக்கு ஏற்றதாக இல்லை. இது அரசு நிறுவனங்களின் நேர்மையின் சீரழிவை தெளிவாக விவரிக்கிறது.

எனவே இங்கு நான் குறிப்பிடும் பிரதமரின் இரண்டுநாள் பத்ரிநாத், கேதார்நாத் பயணங்களில் வெளிப்படுத்தும் காட்சிகள் தேர்தல் நடத்தை விதிமீறலாக உள்ளதை உறுதிசெய்து தடை விதிக்கவும் தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு தனது கடிதத்தில் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

க்ரைம்

22 mins ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

30 mins ago

க்ரைம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்