கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி

By பிடிஐ

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் மீது ஏர்செல்-மேக்சிஸ் மற்றும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்குகள் உள்ளது. இந்த வழக்குகளை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரித்து வருகின்றன.

இந்நிலையில் வெளிநாடுகள் செல்ல அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி மனு தாக்கல் செய்தார். இதற்கு அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவித்தது.

“கார்த்தி மழுப்பலாக பதில் அளிக்கிறார், விசாரணைக்கு ஒத்துழைப்பதில்லை. இதனால் விசாரணையில் தாமதம் ஏற்படுகிறது” என்று தெரிவித்தது.

இதையடுத்து விசாரணைக்கு ஒத்துழைக்காவிடில் கடும் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என கார்த்திக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரியில் எச்சரிக்கை விடுத்தது. வெளிநாடு சென்றால் கட்டாயம் இந்தியா திரும்புவேன், விசாரணக்கு ஒத்துழைப்பேன் என அமலாக்கத் துறையிடம் உறுதிமொழி அளிக்க உத்தரவிட்டது. மேலும் உச்ச நீதிமன்ற செக்ரெட்டரி ஜெனரலிடம் ரூ.10 கோடி டெபாசிட் செய்ய உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கெனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகள் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

13 mins ago

வணிகம்

19 mins ago

இந்தியா

29 mins ago

இந்தியா

39 mins ago

இந்தியா

46 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சினிமா

3 hours ago

மேலும்