சத்தீஸ்கரில் நக்சல்கள் குண்டுவீசித் தாக்குதல்: 2 வீரர்கள் படுகாயம்

By பிடிஐ

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள்  குண்டுவீசித்  தாக்குதல் நடத்தியதில், 2 துணை ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

சுக்மா மாவட்டத்தில் உள்ள கோகுண்டா கிராமத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி கூறியதாவது:

''துணை ராணுவப் பாதுகாப்புப் படையினர் (டிஆர்ஜி), நக்சல்களுக்கு எதிரான ஆப்ரேஷனில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுடன் சிறப்புப் பணிப் படையும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கோகுண்டா பகுதிக்கு அருகில் உள்ள மலையில் அமைந்துள்ள வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து வனத்தை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர்.

இதை அறிந்த நக்சல்கள், ஐஇடி குண்டை திடீரென வெடிக்கச் செய்தனர். இதைத் தொடர்ந்து இரண்டு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்தச் சண்டையில் இரண்டு ஜவான்கள் படுகாயம் அடைந்தனர்.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு  பாதுகாப்புப் படையினர் விரைந்தனர். காயமடைந்த வீரர்கள் இருவரும் வனத்தில் இருந்து மீட்கப்பட்டு ராய்பூரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்''.

இவ்வாறு மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

10 mins ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

30 mins ago

இந்தியா

34 mins ago

வாழ்வியல்

44 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்