ஹரியாணா சட்டசபை தேர்தல்: உறவினர்களை வேட்பாளராக்க மத்திய அமைச்சர்கள் முயற்சி

By செய்திப்பிரிவு

ஹரியாணா மாநிலத்தில் அக்டோபர் 15 ல் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தல், பல பாஜக தலைவர்கள் தம் வாரிசுகளை போட்டியிட வைக்க முயல்கின்றனர்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ், தன் சகோதரியான வந்தனாவை சாபிதோன் தொகுதியில் போட்டியிட வைக்க முயல்வதாக கூறப்படுகிறது.

திட்டக் கமிஷனின் மத்திய இணை அமைச்சரான ராவ் இந்திரஜித்தும் தன் மகளான ஆர்த்தி ராவை இங்குள்ள ரிவாரி தொகுதியில் களமிறக்க வாய்ப்பு தரும்படி கட்சியில் கேட்டிருக்கிறார்.

மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் கிருஷண்பால் குர்ஜர் தன் மகனான தேவேந்தர்பால் குர்ஜருக்காக திகாவ்ன் தொகுதியைக் கேட்டு வருகிறார்.

வட கிழக்கு பகுதி நலன் துறையின் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங்கும் தன் மைத்துனரான அரிதாமான் சிங்கை சோஹா தொகுதியில் வேட்பாளராக்க முயல்கிறார்.

பாஜகவின் எம்பிக்களில் ரத்தன்லாலின் மனைவி பந்தோ கத்தரியா, அஷ்வினி சோப்ராவின் மனைவி கிரண் சோப்ரா எனப் பலரும் இப்பட்டியலில் இணைந்துள்ளனர்.

மறுக்கும் கட்சித் தலைமை

ஆனால், ஹரியாணா பாஜக தேர்தல் பொறுப்பாளரான கைலாஷ் விஜய் வர்கியா மற்றும் ஜெக்தீஷ் முகி, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக்கின் தலைவர் மனோகர்லால் கத்தார் ஆகியோர் எக்காரணத்தை கொண்டும் கட்சித் தலைவர்களின் உறவினர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க முடியாது என உறுதிபடக் கூறியுள்ளனர்.

இது குறித்து ஹரியாணா மாநில பாஜக நிர்வாகிகள் கூறும்போது, ‘வாய்ப்பு கேட்கும் கட்சி தலைவர்கள் தாம் பரிந்துரைக்கும் உறவினரின் வெற்றி உறுதி எனவும், இதுபோல் வெற்றி வேட்பாளர்களுக்கு கட்சியின் கொள்கையில் சற்று மாற்றம் செய்வதில் தவறில்லை எனவும் வாதிடுகின்றனர். தம் வாரிசுகளுக்கு எப்படியாவது வாய்ப்புகளை பெற்றுத் தரும் பொருட்டு தேசிய நிர்வாகிகள் மூலமாக வற்புறுத்தி வருகின்றனர்’ என்றனர்.

மொத்தம் 90 தொகுதிகள் கொண்ட ஹரியானா மாநில சட்டசபைக்கு பாஜக சார்பில் இதுவரை 43 வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது காங்கிரஸ் இரண்டாவது முறையாக ஆளும் இம்மாநிலத்தில் பாஜக தனித்துப் போட்டியிடுகிறது.

மக்களவைத் தேர்தலில் ஹரியாணாவின் ஒன்பது தொகுதிகளில் பாஜக 7-ல் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

33 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஓடிடி களம்

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்