முடிந்தது முதல்கட்ட மக்களவைத் தேர்தல்: திரிபுராவில் 81%, மணிப்பூரில் 78% வாக்குப்பதிவு

By செய்திப்பிரிவு

முதல்கட்டமாக இன்று நடந்த மக்களவைத் தேர்தலில் திரிபுராவில் 81 சதவீத வாக்குகளும், மணிப்பூரில் 78 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. வரும் மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

மக்களவைத் தேர்தலில் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 91 தொகுதிகளில் முதல்கட்டமாக இன்று வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது.

ஆந்திரா 25, அருணாச்சல பிரதேசம் 2, அசாம் 5, பிஹார் 4, சத் தீஸ்கர் 1, ஜம்மு காஷ்மீர் 2, மகாராஷ்டிரா 7, மணிப்பூர் 1, மேகாலயா 2, மிசோரம் 1, நாகாலாந்து 1, ஒடிசா 4, சிக்கிம் 1, தெலங்கானா 17, திரிபுரா 1, உத்தர பிரதேசம் 8 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்துள்ளது.

இதுபோலவே, உத்தராகண்ட் 5, மேற்கு வங்கம் 2, அந்தமான் நிக்கோபார் தீவுகள் 1, லட்சத்தீவுகள் 1 என மொத்தம் 91 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 18 மாநிலங்களில், 2 யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடைபெற்றது.

இந்தநிலையில் முதல்கட்டத் தேர்தலில் மாலை 5 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம் தற்போது வெளியோகியள்ளது. அதன் விவரம் வருமாறு:

 

வாக்குப்பதிவு 5 மணி நிலவரம்

 

திரிபுரா - 81.23%

மேகாலயா - 62%

லட்சத்தீவுகள்: 65.9%

நாகலாந்து - 68%

மணிப்பூர் - 78.20%

தெலங்கானா - 60.57%

அசாம் - 68%

உ.பி. - 59.77%

பிஹார் - 53.06%

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இணைப்பிதழ்கள்

9 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்