நான்கு மாநிலங்களில் திடீர் மழை பலியினால் ஏற்பட்ட துயரத்தை அரசியலாக்காதீர்கள்: கட்சிகளுக்கு மோடி வேண்டுகோள்

By பிடிஐ

குஜராத் உள்ளிட்ட 4 மாநிலங்களில் திடீர் மழைக்கு 50 பேர் பலியாகியிருப்பதை அரசியலாக்க வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் திடீர் மழை, காற்றுக்கு 50பேர் பலியாகினர். இதற்கு குஜராத்திற்கு மட்டும் தனது அனுதாபத்தை வெளியிட்டது சர்ச்சைக்குள்ளானது.

இன்று அதிகாலை, பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், குஜராத்தில் மழைக்கு பலர் உயிரிழந்துள்ளதும் அதற்கு நிவாரணம் அறிவிக்க வேண்டிய சூழ்நிலை வந்ததற்கும் கடுமையான வேதனையடைகிறேன். என்று வருத்தம் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் பிரதமரின் இந்த ட்விட்டர் பதிவுக்கு பதிலளிக்கும்விதமாக ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டார். அதில்  நீங்கள் நாட்டின் பிரதமர் குஜராத் முதல்வரல்ல என்று சாடியிருந்தார்.

பின்னர் பிரதமர் அலுவலகம் ஒரு ட்விட்டை வெளியிட்டது. அதில் PM @narendramodi மத்தியப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் குறித்த தனது துக்கத்தையே அவர் வெளியிட்டார் என்று குறிப்பிட்டது.

அரசியல் ஆக்க வேண்டாம்

இந்நிலையில் குஜராத்தில் தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி சபர்கந்தா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அதில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:

"இந்த நேரத்தில் நான் அரசியல் கட்சிகளை கேட்டுக் கொள்கிறேன். இது அனுதாபத்திற்கான நேரம். அவர்களின் இந்த துயரத்தை தயவுசெய்து அரசியல் ஆக்கக் கூடாது. சோகத்தில் உள்ளவர்களுக்கு நாம் உதவ வேண்டும். மத்திய அரசு மற்றும் மாநில அரசாங்கங்கள்புயல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இவ்வாறு மோடி பேசினார்.

4 மாநிலங்களுக்கும் நிவாரணம்

புயல் மழை தாக்குதல் ஏற்பட்டுள்ள மத்தியப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு நிவாரணமாக ரூ.2 லட்சத்தை பிரதமர் அறிவித்துள்ளார். இது பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

முதலில் குஜராத் மற்றும் ராஜஸ்தானில்தான் பருவமில்லா கால திடீர் மழை ஒரு புயலாக தாக்கத் தொடங்கியது. இதனால் வீடுகளும் விவசாயப் பயிர்களும்

நாசமாகின. இதில் ராஜஸ்தானில் மட்டும் அதிகப்பட்சமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் 15 பேரும் குஜராத்தில் 10 பேரும் மகாராஷ்டிராவில் 3 பேரும் இம்மழையினால் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

30 mins ago

சினிமா

40 mins ago

இந்தியா

48 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்